Breaking News

பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை 600 006 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2223/C7/Jமேகு ஒபக:2022 நாள்: 09.2022 பொருள்: பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் சார்பு 


பார்வை: 

பள்ளிக்கல்வி ஆணையர். தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் இணை செயல்முறைகள். ந.க.எண். 2223/C7/பமேகு/ஒபக/2022 நாள்: 21.07.2022 

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஏப்ரல்-ஜுலை மாதங்களில் நடைப்பெற்று. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம். புதிய உறுப்பினர்களைக் கொண்டு. மாதந்தோறும் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது. பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது. இக்கல்விக்குழுவில் பள்ளி வளர்ச்சிக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் பள்ளி வளர்ச்சிக்கு கிராம பஞ்சாயத்துகளின் பங்களிப்பை முழுமையாக பயன்படுத்த முடியும். எனவே. கிராம சபை கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி. கற்றல் கற்பித்தல், உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, இடைநிற்றல் தொடர்பான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்துகொள்வது அவசியம்