மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா விமர்சையாக தொடங்கி இருக்கிறது.
குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், பதினென் கீழ்க்கணக்கு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் போன்ற தமிழ் காப்பிய, இலக்கண நூல்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்து அதன் மேல் இரு குழந்தைகள் உட்கார்ந்து திருக்குறள் வாசிப்பதுபோன்று அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பம், தமுக்கம் மைதானம் சாலையில் செல்வோரையும் புத்தகத் திருவிழாவுக்கு வரவழைக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த புத்தக சிற்பத்தின் வடிவமைப்பு, அதில் உள்ள செயற்கையான புத்தகங்களுக்கு உயிர்கொடுத்துள்ளது. சென்னை கவின் கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் தாளமுத்து, சேகர் ஆகியோர்தான் இந்த புத்தக சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.