சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக
தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது
தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.6.100லிருந்து ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.77 ஆயிரத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த சம்பள உயர்வு 2016ம் வருடத்தை கருத்தியலாக,1.10.17 முதல் பண பயனுடன்அமல்படுத்தப்படும்.
பென்சன்தாரர்கள்
பென்சன் மற்றும் குடும்ப பென்சன்தாரர்களுக்கும் 2.57 மடங்கு பென்சன் அதிகரிக்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் இருக்கும்.ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதல் செலவு