தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன.
எனவே, உபரியாக, 'சும்மா' இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.
அறிவுறுத்தல் : எந்த தில்லுமுல்லும் இன்றி, பட்டியலை தயாரித்து, சென்னையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.இந்த உபரி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, மாவட்ட வாரியாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது