தமிழக மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராக்கும் வகையில் 54,000
கேள்வி-பதில்கள் அடங்கிய கையேடு, சி.டி. வடிவில் வழங்கப்படும்'' என்று
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக, தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு
நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி,
தமிழக அரசு சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. இதற்காக,
தமிழக சட்டப்பேரைவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, குடியரசுத் தலைவரின்
ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வலியுறுத்திவருகிறார்