Sunday, June 04, 2017
அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது-பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்- கல்வித்துறை மானியத்தின்போது 41 புதிய திட்டம் அறிவிக்கப்படும்:அமைச்சர் செங்கோட்டையன்-முழு தகவல்கள்
அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது- பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்
தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ. 700 சிறப்பு ஊதியம் வழங்கப்படுவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.
கல்வித்துறை மானியத்தின்போது 41 புதிய திட்டம் அறிவிக்கப்படும்:
மக்கள் பாராட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மத்திய அரசிடம் இருந்து ரூ.2472 கோடி பெற்று கொடுத்துள்ளது.
கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பிளஸ்-2, 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கும்போதே தேர்வு முடிவு தேர்வும் அறிவிக்கப்பட்டது.
மேலும் செல்போன் மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இது இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது. கல்வித்துறையில் திள்ளுமுள்ளு நடந்து வருவதாக கூறி வருகின்றனர்.
எங்களிடம் குறைகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம். நாங்கள் சகோதரத்துவ முறையுடன்தான் பணிகளை செய்து வருகிறோம். கல்வித்துறை வெளிப்படை தன்மையுடன்தான் செயல்பட்டு வருகிறது. எங்களை பாராட்டவில்லை என்றாலும் புண்படுத்த வேண்டாம்.

நடக்க இருக்கிற சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை மானியத்தின் போது 41 புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். இதன் மூலம் தமிழக அரசின் கல்வித்துறையை இந்தியாவே பாராட்டும் என்பதில் ஐயமில்லை.
கல்வித்துறைக்காக ரூ. 26,892 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் எடுத்தோம், முடித்தோம் என்ற நிலையில்தான் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷ், கோபி கோட்டாட்சியர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது, ‘‘ஆசிரியர் கவுன்சிலிங்கில் திள்ளுமுள்ளு நடந்ததாக கூறப்படுகிறதே’’ என்று நிருபர்கள் கேட்ட னர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஆசிரியர் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.