நடக்க இருக்கிற சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை மானியத்தின் போது 41 புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். இதன் மூலம் தமிழக அரசின் கல்வித்துறையை இந்தியாவே பாராட்டும் என்பதில் ஐயமில்லை.
கல்வித்துறைக்காக ரூ. 26,892 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் எடுத்தோம், முடித்தோம் என்ற நிலையில்தான் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஆசிரியர் கவுன்சிலிங்கில்
முறைகேடு நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை
எடுக்கப்படும்’’ என்றார்.
ஆனால் வரும் ஜீன் 6ம் தேதி 41 புதிய ஆணைகள் வெளியிடப்படும் என்றும் அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டவை என்றும் வதந்திகள் பரவிவருகின்றன.
*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.
*#நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே அலகு UNIT ஆக மாற்றம் எனத்தகவல்.
*#கூடுதலாக 12 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்படும் எனத்தகவல்.
*#அனைத்துவகை பள்ளிகளில் யோகா ஆசிரியர் நியமனம் எனத்தகவல்.
*#பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரப்படுத்தலாம் எனத்தகவல்.
*#6வது வகுப்பு முதல் கணினியியல் கல்வி ஒரு பாடமாக கட்டாயமாக கொண்டுவரப்படும் எனத்தகவல்.
*#தொடக்கக்கல்வியில் மாவட்டத்தில் உள்ள 1முதல்5 வரையிலும் அனைத்து ஓன்றியங்களையும் இனைத்து மாவட்ட அளவில் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படும் எனத்தகவல்.
*#அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் 10% வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத்தகவல்.
இவற்றின் உண்மைத் தன்மையை அறிய பள்ளி மானியக் கோரி்க்கை வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும்