அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும், கல்விசாரா சங்கங்கள் அமைக்க வேண்டுமென, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும், தொடக்க கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கற்றல், கற்பித்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் துவக்கமாக, அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும், கல்விசாரா சங்கங்கள் அமைக்க, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.செஞ்சிலுவை சங்கம், சாரணர் இயக்கம், பசுமை படை என, ஏதாவது ஒரு இயக்கத்தை துவக்கி, அனைத்து மாணவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமென, லைமையாசிரியர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.!TNGTF!
தற்போது 30 சதவீத நடுநிலைப்பள்ளிகளில் தான், கல்விசாரா சங்கங்கள் உள்ளன.இதை விரிவுப்படுத்துவதன் மூலம், மாணவர்கள் மத்தியில், தலைமை பண்பு, குழு உணர்வு, இயற்கையை காப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றை, செயல்வழியில் விளக்கி, ஈடுபடுத்த முடியும்.!TNGTF!
மாணவர்களின் தனித்திறன் அறிந்து வழிநடத்தவும், கல்விசாரா இயக்கங்கள் பேருதவி புரியும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில்,'பள்ளிகளில் கல்விசாரா இயக்கங்கள் அமைப்பதோடு, வாரத்தில் ஒரு நாளாவது, கூட்டம் நடத்தி, பொதுப்பணிகளில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மைதான வசதியுள்ள பள்ளிகளில், தோட்டம் அமைத்தல், மரக்கன்று நட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்திற்குள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குழு அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும்' என்றனர்.