கல்வி கட்டண விஷயத்தில், விதவைத் தாயிடம், கறாராக நடந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்த, மும்பை ஐகோர்ட் நீதிபதி, ஏழை குழந்தைகளிடம் கருணை காட்டும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.
அதை தொடர்ந்து, கல்வி கட்டணமான, 10 ஆயிரத்து, 500 ரூபாயை ஒரே தவணையில் செலுத்தும்படி, ரீட்டாவை, பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியது. இதனால், ஐகோர்ட்டை மீண்டும் அணுகிய ரீட்டா, படிப்படியாக கல்வி கட்டணத்தை செலுத்த வாய்ப்பு தரும்படி கோரினார்.
பள்ளி நிர்வாகத்தின் பிடிவாத போக்கால் எரிச்சலடைந்த, ஐகோர்ட் மூத்த நீதிபதி, வி.எம்.கானடே, ''தயவுசெய்து, ஏழை குழந்தைகள் கல்வி விஷயத்தில் கருணை காட்டுங்கள். மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அந்த கட்டணத்தை நானே செலுத்துகிறேன்; ஒரு குழந்தையின் கல்வி பாழாக கூடாது,'' என்றார்.