Breaking News

ஜூன் 30க்குள் அறிக்கை தயாரிக்க முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டம் உடனடி ரத்து இல்லைஜூன் 30க்குள் அறிக்கை தயாரிக்க முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டம் உடனடி ரத்து இல்லை


தமிழக அரசின், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை அரசு
ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், பிப்ரவரி மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தினர். இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்தது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்ட சபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கிய கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.