Breaking News

முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு


முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன.

இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும்.அதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்சி.,) முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., முடித்தால் 2 வது ஊக்க உயர்வும் வழங்கப்படும். உயர்க்கல்வி பயிலஆசிரியர்கள் கல்வித்துறையில் முன் அனுமதி பெறவேண்டும். 

ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தனர். முன்அனுமதி இல்லாத தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மறுத்தனர். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்அனுமதி பெறாமல் உயர்க்கல்வி முடித்த ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித்துறை கோரியுள்ளது. இந்த பட்டியலை பெயர் விடுதலின்றி ஜன., 12 க்குள் அனுப்பி வைக்கமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.