தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள், 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் வலியுறுத்தி உள்ளனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழகம் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டது.
இது தொடர்பாக இன்னும் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் இருப்பதால் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீடு விகிதம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மாறுபட்டிருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.