தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும்.
இதற்காக அரசு ஊக்க ஊதிய உயர்வை வழங்கி வருகிறது.அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில்பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம்முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, அரசு தற்போது அறிவித்துள்ளது.
இதனால் பள்ளிச் செயலர்களிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள்கவலையில் உள்ளனர்.முறையாக கல்வித்துறையினரிடம் அனுமதி பெற்ற ஆசிரியர்களுக்கு அடிப்படைஊதியத்துடன் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.தற்போது பள்ளி செயலர்களிடம் மட்டுமே முன் அனுமதி பெற்று உயர்க்கல்வி முடித்தபட்டதாரி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.
மாநில தலைவர் இளங்கோ, திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது:அரசு பள்ளிகளில் ஒரு கல்வி தகுதிக்கு 6 சதவீத ஊக்க ஊதியம், இரண்டு கல்வி தகுதிக்கு (முதுநிலைபடிப்பு) 12 சதவீத ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.பள்ளிச் செயலரிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள் மட்டுமே தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். அதனால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை அனுப்பி உள்ளோம், என்றனர்.