Breaking News

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பள்ளிகள் தோறும் பிப்.10ல் வழங்கல்


சுகாதாரத்துறை சார்பில் பிப்.,10ல் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.மத்தியரசு சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளாக பிப்.,10 கடை பிடிக்கப்படுகிறது. அன்று சுகாதாரத்துறை சார்பில் அங்கன்வாடிமையம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரை வழங்கப்பட உள்ளது.


400 மி.கிராம்
ஒன்று முதல் இரண்டு வயதுடைய குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மி.லி,, திரவ மருந்து , 2 முதல் 19 வயது வரையுடையவர்களுக்கு 400 மி.கி., மாத்திரை வழங்கப்பட உள்ளது.



சுகாதாரத்துறை செவிலியர்கள் அரசு, தனியார் பள்ளிகளில் சென்று இவைகளை வழங்க உள்ளனர். இதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பர். பிப்.,10ல் மாத்திரை சாப்பிடாதவர்களுக்காக பிப்.,15ல் மீண்டும் வழங்கப்பட உள்ளது.



ரத்த சோகை
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ ரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதை அனைத்து மாணவர்களும் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்,” என்றார்.