சென்னை:கடந்த மாத வெள்ளத்தில், வாக்காளர் அடையாள அட்டை தவற விட்டவர்களுக்கு, புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது.
மொத்தம், 43 ஆயிரம் பேர், புதிய அட்டை கோரி விண்ணப்பித்தனர். அவர்களில், 18 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டு, ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், வினியோகம் செய்யப்படுகிறது.மீதமுள்ள, 25 ஆயிரம் பேருக்கு, இன்று அல்லது நாளை முதல் வழங்கப்படும்.இத்தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.