மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை முழுமைப்படுத்தும் விதமாக மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் புதுவை மத்திய பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக புதுவை அரசு அனைத்துக் கொம்யூன்களிலும், நகராட்சியிலும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது.இதன் அடுத்த கட்டமாக மாநில அளவிலான கருத்துக் கேட்பு கலந்தாய்வுக் கூட்டம் கல்வியாளர்களைக் கொண்டு, பல்கலைக் கழக துணைவேந்தர் (பொ) அனிஷா பி கான் தலைமை வகிக்கிறார்.
இதில் கல்வித்துறைச் செயலர் ராகேஷ் சந்திரா, பள்ளிக் கல்வி இயக்குனர் குமார், அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் கிருஷ்ணராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாநிலப்பயிற்சி மைய விரிவுரையாளர்கள், அனைவருக்கும் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு விவாதிக்க உள்ளனர்.