மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
2015-ஆம் ஆண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து மொத்தம் 959 மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 7.5 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
தேர்வில் பங்கேற்ற அனைவருக்குமான மதிப்பெண் பட்டியலும், தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழும் விரைவில் விநியோகிக்கப்படும் என சி.பி.எஎஸ்.இ. தெரிவித்துள்ளது.
அடுத்த தேர்வுகள்: 2016-ஆம் ஆண்டுக்கான சி.டி.இ.டி. தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியன்றும், செப்டம்பர் 18-ஆம் தேதியன்றும் அடுத்தடுத்து நடத்தப்படும் எனவும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.