Breaking News

வரலாற்று சுவடுகள் : “சென்னையைப் பற்றி ”



சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின்சார்பாக ஃப்ரன்சிஸ்டே,மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்பநாயக்கர் என்றஅக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அன்னாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டுசென்னை டே கொண்டாடப்படுகிறது.

சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்:

1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1835 -மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது.

1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது


1856-இல் முதல் புகைவண்டி சென்னை ராயப்புரத்திற்கும் ஆர்காட்டிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் புகைவண்டி நிலையம் ராயபுரம்.

அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைகழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.

1871 -முதல் மக்கள் தொகை கணப்பெடுப்பு எடுக்கப்பட்டது.அப்பொதைய மக்கள் தொகை 3,97,552.

1882- சுதேசமித்திரன் முதல் தமிழ் தினசரி துவக்கப்பட்டது. முதல் தொலைபேசியும் துவக்கப்பட்டது.

1892 – உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலன்கரை விளக்கமாகவும் பயன்பட்டது.

1896 -கன்னிமரா நூலகம் திறக்கப்பட்டது.

1904 -முதல் கப்பல் துறைமுகம் , பின்னர் 1964 இல் நவீன மேம்படுத்தப்பட்ட துறைமுகம்

1911 -முதல் திரைப்படம் காட்டப்பட்டது.

1913 -முதல் திரை அரங்கம் , எல்பின்சன் எலெக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயரில் துவக்கப்பட்டது.

1920 -முதல் சட்டமன்ற தேர்தல், முதல் சி.முதல்வர்.சுப்பராயலு.சுதந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி

1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.

1996 -மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.

அன்றும் இன்றும்!

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டகாலத்தில் அவர்களது தாக்கதின் விளைவாக நம் நகரங்கள் மற்றும் தெருக்க்களுக்கு அவர்கள் பெயரை வைத்து சென்று விட்டார்கள் தற்போது
அந்த பெயர்களுக்கு நம்மவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சென்னையில் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற தெருக்களின் பட்டியலைப்பார்ப்போம்!

மவுண்ட் ரோட் – அண்ணா சாலை

பூனமல்லி ஹை ரோட் – பெரியார் ஈ.வி.ஆர் சாலை

எட்வர்ட் எல்லியட்ச் ரோட் – டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை

எல்லியட் பீச் ரோட் – சர்தார் படேல் சாலை

மவ்பரிஸ் ரோட் – டி.டி.கே சாலை

கமாண்டர் இன் சீப் ரோட் – எத்திராஜ் சாலை

நுங்கம்பாக்கம் ஹை ரோட் – உத்தமர் காந்தி சாலை

வாரென் ரோட் – பக்தவசலம் சாலை

லாயிட் ரோட் – அவ்வை ஷண்முகம் சாலை

ஆலிவர் ரோட் – முசிரி சுப்ரமணியம் சாலை

மான்டியத் ரோட் – ரெட் கிராஸ் சாலை

பைகிராப்ட்ஸ் ரோட் – பாரதி சாலை

பர்ஸ்ட் லைன் பீச் ரோட் – ராஜாஜி சாலை

ராயபேட்ட ஹை ரோட்- -திரு.வி.க சாலை

லாட்டிஸ் பிரிட்ஜ் ரோட் – டாக்டர் முத்து லஷ்மி சாலை மற்றும் கல்கி. கிருஷ்ண மூர்த்தி சாலை

சேமியர்ஸ் ரோட் – பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை.

கிரிபித் ரோட் – மகா ராஜபுரம் சந்தானம் சாலை

வால் டாக்ஸ் ரோட் – வ.வு.சி சாலை.

ஆர்காட் ரோட் – என்.எஸ்.கே சாலை

ஹாரிஸ் ரோட்- ஆதித்தனார் சாலை