Breaking News

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி

தேனியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிக் கருத்தரங்கு  புதன்கிழமை நடைபெற்றது.


   பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமை வகித்தார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் அறிவொளி முன்னிலை வகித்தார். அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் சிறப்புரையாற்றினார்.

  அரசுத் திட்டங்கள் செயலாக்கம், மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து மேம்படுத்துவது, நிர்வாகத் திறன், முன்னோடி முதன்மைக் கல்வி அலுவலராகத் திகழ்வது ஆகியன குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

  பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் குமார், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இணை இயக்குநர் நரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெறுகிறது.