
இவரின் தந்தை, தோட்டக்கலைத் துறை அதிகாரியாகவும், தாய், கல்லுாரி விரிவுரையாளராகவும் பணிபுரிகின்றனர்.நான்காம் வகுப்பு முதல், இந்தி படிக்க துவங்கிய சாய் வைஷ்ணவி, இளங்கலை பட்டப்படிப்பை, சில மாதங்களுக்கு முன் முடித்து விட்டார். முதுகலை பட்டப்படிப்பிற்கு சமமான, படிப்புகளை, கடந்த ஆகஸ்ட்டில் முடித்தார். தன், 10 வயதிற்குள், இந்தியில், முதுகலை பட்டப் படிப்பை முடித்துள்ள அவரை, பள்ளி நிர்வாகம் பாராட்டியது.