Breaking News

ஊதிய விகிதங்கள் மாற்றம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு:


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு:
1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்துள்ள அரசு அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப்பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், இவற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக் கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசு முடிவு: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு


  • குடும்ப நல ஒய்வூதியம் 3 லட்சம்
  • கெளரவ விரிவுரையார் சம்பளம் 15000
  • சத்துணவு ஊழியர் ஒய்வூதியம் 1500
  • 110 விதியில் முதல்வர் அறிவிப்பு

இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் விதி 110 இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள்



தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பிளஸ் 2வுக்கு மார்ச், 4; மார்ச், 15ல் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வு அறையில் ஆசிரியர்களின் கண்காணிப்பு பணிகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

Emis ல் முதலில் நாம் செய்ய வேண்டிய வேலைகள்...


EMIS news:
EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

தி இந்து: தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.


ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.

Jacto - கூட்டத்தின் முக்கிய முடிவு வெளியீடு

.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு ந.ரெங்கராஜன் அவர்கள் தலைமையில் TESTF மாநில அலுவலகமான JSR  மாளிகையில் நடைபெற்ற ஜேக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வருகிற

20.,2 .2016 அன்று மாவட்ட தலைநகரில் "மனித சங்கிலி" போராட்டம்
23 ம் தேதி " சென்னை கோட்டை" நோக்கி முற்றுகை போராட்டம்,
சட்டமன்ற தேர்தல் பணியை "புறக்கணிப்பு" உள்ளிட்ட மூன்று கட்ட போராட்டங்கள் அறிவித்து முடிவாற்றப்பட்டுள்ளது.

வருமான வரி சலுகையில் மலைப் படி, & குளிர்காலப் படிகளை கழிக்கும் விதிகள்மற்றும் CPS இன் MISSING CREDIT தொடர்பான RTI தகவல்..

இதே நாளில் அன்று(18 பிப்ரவரி) ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் புிறப்பு



Ramakrishna_Paramahamsa
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு


10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். நன்றாக படிக்கும் மாணவர்கள் சிலர் தவறாக சில விடைகளை எழுதியதாக தெரிந்து விட்டால், சரியான விடைகள் அனைத்தையும் அடித்துவிட்டு, அந்த தேர்வில் மதிப்பெண் எதுவும் எடுக்காமல் சிறப்பு உடனடித்தேர்வை எழுதுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அரசு ஊழியர் போராட்டம் பற்றி பேச அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து ஒரு பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டார்.‘‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்....’’ என்று அவர் பேச தொடங்கியதும், சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு நிறைய உறுப்பினர்கள் இதுபற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் என்னிடம் கொடுத்துள்ளனர். ஆய்வில் உள்ளது. பதில் வந்ததும் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.

ரூ.251க்கு உலகின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்


ரூ.251க்கு உலகின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்உலகின் விலை குறைந்த விலை ஸ்மார்ட் போன் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் விதமாக ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனம், ரூ.251 க்கு இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

ஆசிரியர்கள் ஸ்டிரைக்; பிளஸ் 2 தேர்வு பாதிக்கும் அபாயம்?

பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுத் தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ நிர்வாகிகளுடன்,அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது; ஆனால், எந்த உறுதியும் அளிக்கவில்லை. எனவே, ஜாக்டோவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நேற்று முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர். முதல் நாளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் வேலை

இந்திய குடியரசு தலைவர் மாளிகையில், காலியாக உள்ள  பல்வேறு பிரிவுகளில் 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IGNOU GRADE CARD DOWNLOAD DEC 2015

+1 common exam time table 2016



2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்


பிப்.16-தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:2016–2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கென 24,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா


தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது; அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
தமிழகத்தில், மார்ச், 4 முதல், பிளஸ் 2; மார்ச், 15 முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன;15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD.. NMMS EXAM HALL TICKET

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் சமரசம் இல்லை- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு --- அறிக்கை


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*****************************"*
அறிக்கை
**********

தமிழக அரசு ஜாக்டோ அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தை யில் தெரிவித்த படி பட்ஜெட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏமாற்ற மளிக்கிறது.


பட்ஜெட் அறிவிப்பிற்குப் பின்   பிப்ரவரி18-ல் காலை 10.00 மனிக்கு ஜாக்டோ பொதுக்குழு  சென்னையில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி   மாநில  அலுவலகமான JSR மாளிகையில்  கூடுகின்றது.

TNPSC- VAO STUDY METERIALS

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்:


தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

10ம் வகுப்பு பொது தேர்வில் தமிழா, பிற மொழியா?-மாணவர்கள் குழப்பம்


தமிழகத்தில், 2006 முதல், பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டது. இதன் படி, முதல் ஆண்டில், 1ம் வகுப்பு, அடுத்த ஆண்டில், 2ம் வகுப்பு என, தற்போது, 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாகியுள்ளது.இந்நிலையில், '2006ல் தமிழ் பாடம் கற்க துவங்கிய பிற மொழி மாணவர்கள், இந்த ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வேண்டும்' என, கல்வி ஆண்டின் துவக்கத்தில், தேர்வுத்துறையும், பள்ளிக்கல்வித் துறையும் உத்தரவிட்டன.

தொடக்ககல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் (INSPIRE AWARD) 2016 - நடைமுறை படுத்துவதில் சில மாற்றங்கள் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


ALAGAPPA UNIVERSITY M.Phil (Summer Sequential Programme) - Date Extended ALAGAPPA UNIVERSITY

M.Phil (Summer Sequential Programme) - Date Extended


The last date for issue and receipt of filled in Applications Form for M.Phil (Summer Sequential Programme for teachers) extended upto 19.02.2016