காவல் துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வு முடிவு இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 1078உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
Breaking News
மழையால் பாதித்த வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டாம்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்
மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-
வட கிழக்குப் பருவமழை காரணமாக, அடுத்துவரும் நாள்களிலும் தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆய்வு அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக சில அறிவுரைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
கனமழை முன்னறிவிப்பின் காரணமாக அண்ணாமலைப்பல்கழகத்திற்கு வரும் 18.11.2015வரை விடுமுறை அறிவிப்பு
கனமழை முன்னறிவிப்பின் காரணமாக அண்ணாமலைப்பல்கழகத்திற்கு வரும் 18.11.2015வரை விடுமுறை அளிக்கப்படுகிறது எனினும் நவம்பர் 23ம் தேதி வரை நடைபெறவுள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன் அவை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
எனினும் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை மற்றும் அனைத்து அத்தியாவசியப்பணிகளும் தொடர்ந்து செயல்படும் என பல்கலைகழக பதிவாளர் முனைவர் க.ஆறுமுகம் பொறுப்பு அறிவித்துள்ளார்.
Labels:
UNIVERSITY
ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா கூறினார்.
குழந்தைகள் தின விழா, டாக்டர்
எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
விழாவில் தலைமை வகித்து, டி.சபிதா பேசியது:
Labels:
பள்ளிக் கல்வி
பயன் தராத வழிமுறைகள் -ரூ.80க்கு 'செக்' மாணவர்கள் 'ஷாக்'
சேலம்:அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளில் பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசுத்தொகை, 100 ரூபாய் மற்றும், 80 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதால், பெற்றோர், மாணவ, மாணவியர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்று முதல், ௮ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியரிடையே, பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டி, பள்ளி அளவில், நடத்தப்பட்டது.
Labels:
SSA
FLASHNEWS:- கனமழை எதிரொலி : 16.11.15 விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
FLASH NEWS:
- கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
- திருவாரூர் பளளிகள் மற்றும் கல்லூரி விடுமுறை
- சேலம் பளளிகள் மற்றும் கல்லூரி விடுமுறை
- நாமக்கல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருச்சி (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- நாகை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- அரியலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- கரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Labels:
பத்திரிக்கை செய்தி
2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு
ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
Labels:
தொடக்க கல்வி
ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? இடைநிலை, பட்டதாரிகள் ஏமாற்றம்
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில்ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும்.
Labels:
TET
பிளஸ் 2 தனி தேர்வர்16 முதல் விண்ணப்பம்
சென்னை:'மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், 16 முதல், 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், 10ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான விவரங்களை அங்கே பெறலாம். சேவை மைய முகவரி, http:/www.tndge.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது
Labels:
HSC,
பள்ளிக் கல்வி
பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு மூவகைச் சான்று: நடைமுறைச் சிக்கலால் ஆசிரியர்கள் தவிப்பு
மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் மூலம் மாணவ, மாணவியருக்கு செயல்படுத்தப்பட்டுள்ள மூவகைச் சான்று பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறைச்சிக்கலால் சான்றுகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்கள் 6ஆம் வகுப்பு படிக்கும் போது சாதி, இருப்பிடம் மற்றும் தந்தையின் வருவாய்ச் சான்றை வருவாய்த்துறையில் பெறுவது வழக்கம். தற்போது ஆன்லைன் மூலம் சான்றுகள் பெறும் வசதி நடைமுறையில் உள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
அண்ணா பல்கலை. தேர்வுகள் மேலும் 2 நாள் ஒத்திவைப்பு
தொடர் மழை பெய்ததன் காரணமாக மேலும் இரண்டு நாள்கள் நடைபெற இருந்தத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு காரணமாக, வியாழக்கிழமையன்று நடைபெற இருந்தத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
Labels:
UNIVERSITY
மத்திய அரசு விதிமுறைகளுக்குசத்துணவு பணியாளர்கள் எதிர்ப்பு
குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், தமிழகத்தில், 1982ல், சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.ஒரு மாணவருக்கு, 5ம் வகுப்பு வரை, தலா, 100 கிராம் அரிசியும்; 6 முதல், 10 வரை, 150 கிராம் அரிசியும் ஒதுக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை மத்திய அரசும்; 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, மாநில அரசும், அரிசி செலவை ஏற்கின்றன. மளிகை பொருட்கள்
உள்ளிட்ட மற்ற செலவுகளில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை தமிழக அரசும் வழங்குகின்றன. முட்டை செலவை, தமிழக அரசே ஏற்கிறது.
Labels:
பத்திரிக்கை செய்தி
ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.
3. Safe search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.\
5. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
Labels:
COMPUTER
813 வி.ஏ.ஓ., இடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு
சென்னை:'வருவாய் துறையில் காலியாக உள்ள, 813 கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, பிப்., 14ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது..என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் ெவளியிட்ட அறிவிப்பு:வி.ஏ.ஓ., பதவிக்கான, 813 காலியிடங்களை நிரப்ப, பிப்., 14ல் எழுத்து தேர்வு நடக்கும். இதற்கு, www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில், டிச., 14 வரை விண்ணப்பிக்கலாம்; தேர்வு கட்டணத்தை, டிச., 16க்குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் பதிவு கட்டணமாக, 50 ரூபாய் செலுத்தி,
Labels:
TNPSC
டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வௌியிட்ட அறிவிப்பு:
சென்னை;'வருவாய் துறையில் காலியாக உள்ள, 813 கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, பிப்., 14ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வௌியிட்ட அறிவிப்பு:வி.ஏ.ஓ., பதவிக்கான, 813 காலியிடங்களை நிரப்ப, பிப்., 14ல் எழுத்து தேர்வு நடக்கும். இதற்கு, www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில், டிச., 14 வரை விண்ணப்பிக்கலாம்; தேர்வு கட்டணத்தை, டிச., 16க்குள் செலுத்த வேண்டும்.
Labels:
TNPSC
பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு
தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும்,
இடைவேளை முடிந்து, மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு வந்ததும், வருகை பதிவேடு சரிபார்க்கப்பட வேண்டும்; தொடர்ந்து, மதிய உணவு முடிந்து, வகுப்பு துவங்கும் போதும்; மாலைஇடைவேளைக்கு பிறகும் சரிபார்க்கப்பட வேண்டும்.
Labels:
தொடக்க கல்வி
தமிழகத்தை தாக்குமாபுயல் சின்னம்?
சென்னை:'அரபிக் கடலில், கேரளா அருகிலும்; வங்கக் கடலில், அந்த மான் கடல் பகுதியிலும், இரண்டு காற்று அழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளதால், அடுத்த இரு நாட்களில், தமிழகத்தில் கனமழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:கேரளாவுக்கு அருகே, அரபிக் கடலில் உருவாகி உள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து, லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நாளை கனமழையும், வட மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
TNPSC VAO தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்.
குரூப் -1 முதல் நிலை, குரூப் -2 முதல் நிலை, குரூப் -4 தேர்வுகளுக்கு என்ன புத்தகங்கள் படிக்கலாம் ...
அஞ்சலக தேர்வு அனுமதிச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு
தபால்காரர் (போஸ்ட்மென்), மெயில் கார்டு தேர்வுக்கான அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Subscribe to:
Posts (Atom)




