Breaking News
சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?- தவிற்க வழிமுறைகள்
நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள். சித்த மருத்துவத்தில் இதனை அரச உறுப்பு என கூறுவார். உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை செய்வது சிருநீரகங்கலாகும். அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.
சிறுநீர் கற்கள் என்றால் என்ன?
சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (CRYSTALS) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?
Labels:
மருத்துவம்
Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I for the year 2013-2014 and 2014-2015
Labels:
TRB
மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.
Labels:
SSA
பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த புதிய வசதி: 'டிடி' எடுக்க வேண்டாம்
சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்யும் போது, அதற்கான கட்டணங்களை வங்கி வரைவோலைக்கு 'டிடி' பதிலாக, ஆன் - லைன் முறையில், வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, புதிய வசதி துவங்கப்பட்டு உள்ளது.
பல்வேறு பிரச்னைகள்:
தமிழகத்தில், சொத்து பரிமாற்றத்துக்கான ஆவண பதிவின் போது, அதன் சந்தை மதிப்பில், 7 சதவீதம் முத்திரைத்தீர்வை; 1 சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இதேபோன்று, பாகப்பிரிவினை, உயில், பொது அதிகார ஆவணம், கொடை ஆவணம், தான பத்திரம், ஒப்பந்தம் போன்ற ஆவணங்களை பதிவு செய்யவும் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில், ரொக்க பயன்பாடு அதிகமாக இருப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, முத்திரைத்தீர்வை தொகையை வங்கிகள் வாயிலாக செலுத்த, 'இ - ஸ்டாம்பிங்' வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, பதிவு கட்டணத்தை வங்கி வரைவோலையாக 'டிடி' பெறும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. சொத்துகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், பதிவு கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையும் அதிகமாகிறது. இதனால், பெரிய தொகைக்கு வங்கி வரைவோலை எடுக்கும் போது, அதற்கான கமிஷன் தொகையும் அதிகரிக்கிறது. இதையடுத்து, பதிவு கட்டணங்களை, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, 'நெட் பேங்கிங்' சேவையை பயன்படுத்தி, ஆன் - லைன் முறையில் பதிவுத் துறை கணக்கில் செலுத்த, புதிய வசதி துவங்கப்பட்டு உள்ளது.
கூடுதல் செலவின்றி...:
முதற்கட்டமாக, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றில், இதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், இச்சேவையை பயன்படுத்தி, பதிவு கட்டணத்தை எளிதாக, எவ்வித கூடுதல் செலவும் இன்றி செலுத்தலாம் என்கின்றனர், பதிவுத் துறை அதிகாரிகள்.
Labels:
பத்திரிக்கை செய்தி
TNGTF மாநில பொதுச்செயலாளரின் முக்கிய தகவல்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அறிவிப்பால் பொதுக்கூட்டம்,போராட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால் வரும் 25.01.2015 அன்று நடைபெற இருந்த கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
Labels:
ASSOCIATION NEWS
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி
'தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.ரவி விண்ணப்பித்தார். அதற்கு துறை பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள், இரண்டு, உண்டு, உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில், 64,400 மாணவர்; 63,566 மாணவியர்; 31,594 உண்டு, உறைவிட பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், 1,831 இடைநிலை ஆசிரியர்; 2,014 பட்டதாரி ஆசிரியர்; 671 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 475 இடைநிலை ஆசிரியர்; 96 பட்டதாரி ஆசிரியர்; 45 சிறப்பு ஆசிரியர் என, மொத்தம் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில், 829 ஆதிதிராவிடர் நல விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள் செயல்படுகின்றன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Labels:
பத்திரிக்கை செய்தி
வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
சென்னை: கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி: எழுத்துத் தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜனவரி 27 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை, சென்னை TNPSC தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
மேற்கண்டவற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள்,www.tnpsc.gov.inஎன்ற இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கலந்தாய்விற்கான தேதி மற்றும் நேரம் ஆகிய விபரங்கள், விரைவு தபால் மூலமாக, ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றில் கலந்துகொள்வோர் அனைவருக்கும் பணி நியமனம் என்ற உத்தரவாதம் கிடையாது. காலிப் பணியிடங்களின் அடிப்படையிலேயே பணி நியமனம் நிகழும்.
இந்த வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு, வேறு மறுவாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.tnpsc.gov.in
Labels:
TNPSC
TET- 2013 தேர்வில், குறைந்தபட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது-TRB
ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றிபெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
டி.ஆர்.பி.,யால், 2012 - 13ல் நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து,பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டனர்.சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ்கள் மட்டும், பதிவிறக்கம் செய்யப்பட்டு,
Labels:
TRB
PG Asst. ஊதியப் பிரச்னை: அரசுக்கு நோட்டீஸ்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வி.மணிவாசகன் உள்பட ஆசிரியர்கள் வி.வரதன், பி.ராஜேந்திரன், ஜி.கே.ஐயப்பன் ஆகிய நான்கு பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழ்நாடு பள்ளிகளில் ஆசிரியர்கள் மூன்று வகைகளில் பிரிக்கப்படுகின்றனர். அதில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பாடம் எடுப்பவர்கள்.
Labels:
COURT
100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒவ்வொரு அரசுப் பள்ளிகளும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற, மாநில கல்வித்துறை பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றது. இதற்காக, பள்ளிக் கல்வித்துறை, பல்வேறு திட்டங்களையும், புதிய செயல்பாடுகளையும் வகுத்து வருகிறது.
அனிமேஷன் பாடங்கள்:
காலை மற்றும் மாலை வேளையில் கூடுதல் வகுப்புகள், திருப்புதல் தேர்வுகள், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என, அனைத்து வகையிலும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், எத்தனை புதிய செயல்பாடுகள், முயற்சியும் செய்தாலும், அரசுப் பள்ளிகளில் நுாறு சதவீத தேர்ச்சி என்பது, பெரும்பாலும், அரிதாகவே காணப்படுகிறது.
Labels:
பள்ளிக் கல்வி
மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்-பாஸ் கட்: தமிழக அரசு உத்தரவு.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக மாணவர்களிடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. படிகட்டில் பயணம் செய்வதால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு, தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Labels:
பள்ளிக் கல்வி
பொதுத்தேர்வில் கோடிட்ட தாள்கள் பயன்படுத்த கல்வித்துறை முடிவு.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மொழிபாடங்களுக்கு மட்டும் கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்) பயன்படுத்த தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு பொதுத்தேர்வில் மொழிபாடங்களை எழுதும் மாணவர்கள் சிலர் சரியான நேர்கோட்டில் எழுதாததால், விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த குறைபாடுகளை களையும் பொருட்டு, பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்) வழங்கினால், சீரமம் குறையும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.
Labels:
பள்ளிக் கல்வி
டி.இ.டி - 2013 தேர்வு சான்றிதழைப் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை அணுகலாம்: டி.ஆர்.பி
ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டி.ஆர்.பி.,யால், 2012 - 13ல் நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டனர்.
Labels:
TRB
24.01.2015 அன்று நடைபெறும் NMMS தேர்விற்கு 20.01.2015 முதல் இணையதளத்தில் Hall Ticket டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்
TALENT TEST HALL TICKET DOWNLOAD
click here to download the press release of nmms exam
Labels:
TALENT EXAM
மாற்றுத் திறனாளி பின்னடைவு காலியிடங்கள் பற்றி விளக்க ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு
மாற்றுத் திறனாளிகளுக்கான, பின்னடைவு காலியிடங்கள் பற்றிய நிலையை விளக்க, துறை ஆணையர் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம், அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அனைத்து துறைகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்ப வேண்டும் என, கூறியுள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு கிராக்கி
சி.பி.எஸ்.இ., உட்பட பிறவாரிய பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இது தமிழ் பாடத்தில், பட்டம் பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், தற்போது 590 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் 200 ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 2006 கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும் கல்வியாண்டு முதல் (௨௦௧௫- ௧௬) தமிழ் பாடம் கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் கட்டாயம் தமிழ் பாடத்தில் தேர்வு எழுதுவது அவசியம்.
Labels:
பள்ளிக் கல்வி
ஜன. 22-இல் அரசுப் பணியாளர் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்
அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக, அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் கு. பாலசுப்பிரமணியன், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், தற்போது, அகவிலைப்படி மட்டும் 107 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. எனவே, அனைத்துத் துறை அரசு ஊழியர்களின் 50 சதவிகித அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களுக்கு பாதுகாப்பானது அல்ல.
இதுதொடர்பாக, அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் கு. பாலசுப்பிரமணியன், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், தற்போது, அகவிலைப்படி மட்டும் 107 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. எனவே, அனைத்துத் துறை அரசு ஊழியர்களின் 50 சதவிகித அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களுக்கு பாதுகாப்பானது அல்ல.
Labels:
பத்திரிக்கை செய்தி
Subscribe to:
Posts (Atom)





