Breaking News
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசு முடிவு
பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல்
தடுப்பது எப்படி?என்பது குறித்து சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்குப்
பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்
வரமுருகன் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
வளர் இளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு ரத்தசோகை
ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களுக்கு
போலிக் அமிலம் அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வாரந் தோறும்
வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், மாணவர்களின் நினை
வுத்திறனும், சிந்திக்கும் ஆற்ற லும் கற்றல் திறனும் வளரும். அவர் களின்
உடல்நலன் மேம்படும்.
Labels:
பள்ளிக் கல்வி
சட்டப் படிப்பு: இன்று (ஜூன் 5)முதல் விண்ணப்ப விநியோகம்: 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு வயது உச்ச வரம்பு நீக்கம்
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப்
படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூன்
5) தொடங்குகிறது என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 8-ஆம்
தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் முன்னர்
அறிவித்திருந்தது. ஆனால், அதன்படி விநியோகிக்கப்படவில்லை.
Labels:
UNIVERSITY
'குரூப் - 1' தேர்வில் மாற்றுத் திறனாளிக்கு கூடுதல் நேரம் வழங்க உத்தரவு
குரூப் - 1' பிரதான தேர்வில்,
மாற்றுத்திறனாளிக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் என,
டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்;
மாற்றுத்திறனாளி. அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த இவர், எம்.எஸ்சி.,
முடித்துள்ளார். குரூப் - 1 தேர்வுக்கு, 2013ல் விண்ணப்பித்தார்; முதற்கட்ட
தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
Labels:
TNPSC
அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம் நீட்டிப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்,
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த மே 6-ஆம் தேதி முதல் பொறியியல்
படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொறியியல்
புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை நடைபெறவுள்ளது. பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 5 என
அறிவிக்கப்பட்டிருந்தது.
Labels:
UNIVERSITY
தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை! முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுந்துள்ள நிலையில், மேகி நூடுல்சுக்கு தமிழகத்தில் தடை விதித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேகியை விற்பனையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
Labels:
பத்திரிக்கை செய்தி
அரசு பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் துவங்க திட்டம்!
மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்கப்
பள்ளிகளில், சென்னை மாநகராட்சி போல், கே.ஜி., வகுப்புகளைத் துவங்க,
தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைந்த
பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு
உள்ளது.தமிழகத்தில், தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால், அரசு தொடக்கப்
பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
Labels:
தொடக்க கல்வி
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 4, 5-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு ஜூன் மற்றும் ஜூலை
மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 4, 5-ம்
தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தட்கல் முறையில்
விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
கல்வித்துறையால்
அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தட்கல்
முறையில் விண்ணப்பிக்கலாம். இதன்படி வரும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு துணை தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
Labels:
HSC,
பள்ளிக் கல்வி
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்கள் குறித்த விவரங்களை 3 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில்,
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மற்றும் சமுதாயத்தில்
பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்கள் குறித்த
விவரங்களை இணையதளத்தில் 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று
பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாற்றத்துக்கான
இந்தியா என்ற அமைப்பின் இயக்குனராக இருப்பவர் பாடம் ஏ.நாராயணன். இவர்,
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
கட்டணத்தொகை பாக்கி
தமிழ்நாடு மழலையர், தொடக்கப்பள்ளி,
மெட்ரிக்குலேசன், மேல்நிலை, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் கூட்டம்,
கடந்த ஏப்ரல் மாதம் 23–ந்தேதி சென்னையில் நடந்தது.
Labels:
COURT,
தொடக்க கல்வி
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு இணைய வழி கலந்தாய்வு தேதி அறிவிப்பு
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி -
பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி: 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக்
கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி
மூலம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஜூன் 4-ஆம்
தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனங்களில் ஒப்படைக்கலாம்.
Labels:
B.ED,
தொடக்க கல்வி
காலி பணியிடங்கள் கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை முடிவு
இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன்
பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை
முடிவு செய்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை
பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது.
இந்நிலையில் அனைத்து
மாவட்டங்களிலும் இப்பள்ளிகளில் பாடவாரியாகஉபரியாக உள்ள ஆசிரியர்களின்
எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு
அனுப்பப்பட்டுள்ளது.அவர்கள் தற்போதுள்ள காலிப்பணியிடங்களில் பணி நிரவல்
மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர்
கூறுகையில்,"" பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் அந்த மாவட்டத்தில் வேறு
பள்ளி காலிப்பணியிடங்களிலோ , வெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர்.
அதன்பின்னர் எஞ்சிய காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படி இடமாறுதல்
கவுன்சிலிங் நடத்தப்படும்,''என்றார்.
Labels:
பள்ளிக் கல்வி
பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு
✅Mr.Radhakrishnan CEO Kanyakumari to PTA Secretary, Chennai
✅Virudhu Nagar CEO Mr.Jayakumar to Kanyakumari
✅Tiruvannamalai SSA CEO Mr.Pugalhendhi to Viruthunagar CEO
✅Krishnagiri SSA CEO Mr.Ponkumar to Tiruvannamalai CEO ✅ Karur CEO Mrs.Tiruvalarselvi to Tanjore
✅ Tanjore CEO Mr.Tamilvannan to Krishnagiri
✅ Krishnagiri CEO to karur
✅Tuticorn CEO Mr.Munusamy to Perambalur ✅ Nagapattinam CEO Ramakrishnan to Tuticorn
✅Coimbatore CEO Mrs.Gnanagowri to Salem.
✅ Kancheepuram CEO Mrs.Shanthy to Pudhukottai
✅ Pudhukottai CEO Mr.Arulmurugan to Coimbatore ✅ Salem SSA ceo Usha to Kancheepuram
✅Virudhu Nagar CEO Mr.Jayakumar to Kanyakumari
✅Tiruvannamalai SSA CEO Mr.Pugalhendhi to Viruthunagar CEO
✅Krishnagiri SSA CEO Mr.Ponkumar to Tiruvannamalai CEO ✅ Karur CEO Mrs.Tiruvalarselvi to Tanjore
✅ Tanjore CEO Mr.Tamilvannan to Krishnagiri
✅ Krishnagiri CEO to karur
✅Tuticorn CEO Mr.Munusamy to Perambalur ✅ Nagapattinam CEO Ramakrishnan to Tuticorn
✅Coimbatore CEO Mrs.Gnanagowri to Salem.
✅ Kancheepuram CEO Mrs.Shanthy to Pudhukottai
✅ Pudhukottai CEO Mr.Arulmurugan to Coimbatore ✅ Salem SSA ceo Usha to Kancheepuram
Labels:
பள்ளிக் கல்வி
பள்ளி மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிய இலவச பஸ் பாஸ்: போக்குவரத்து துறை அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரத்தில் புதிய பயண
அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. புதிய இலவச பஸ்
பாஸ் வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
பயண அட்டை தயாரிக்கும் பணியில் கல்வித்துறையினருடன் இணைந்து போக்குவரத்து
துறையும் பணியாற்றி வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள்
திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிய இலவச
பஸ் பாஸ்கள் வழங்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு அமைச்சுப் பணி - பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் உதவியாளர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி-I மற்றும் தொகுதி-IIக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, தேர்வெழுத மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்துகொள்ள அனுமதி, தடையின்மைச் சான்று கோருதல் சார்பாக இயக்குனர் உத்தரவு
Labels:
பள்ளிக் கல்வி
74 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு ஜூன் 15-க்குள் அறிவிக்கை வெளியாகும்.
74 பணியிடங்களுக்கான குரூப்-1 புதிய தேர்வு
அறிவிக்கை ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி
பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சித்தா, யுனானி,
ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் 83 துணை மருத்துவர் காலி பணியிடங்களுக்கான
தேர்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வை 3 ஆயிரத்து 695 பேர் எழுதினர்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 நகரங்களில் 15
இடங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சென்னையில் ஆயிரத்து 798 பேர் இதனை
எழுதினர். எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
தேர்வை டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் தேர்வு
கட்டுப்பாடு அலுவலர் ஷோபனா பார்வையிட்டனர்.
Labels:
TNPSC
2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு
தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில்,
மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக்
கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு,
பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும்
உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள், பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன.
இதில், பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மார்ச் மாதத்தில், ஒரே
வாரத்தில் மூன்று இடங்களில், பள்ளிகளின் கட்டடம் இடிந்து விபத்து
ஏற்பட்டது.
Labels:
பள்ளிக் கல்வி
அட்மிஷன் பெற அரசு பள்ளிகளிலும் கட்டணம் வசூலிப்பு; அதிருப்தியில் பெற்றோர்
திருப்பூரில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு
பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, 2,000 முதல் 3,500 ரூபாய் வரை கல்வி
கட்டணம் வசூலிப்பதால், பெற்றோர் அதிருப்தி அடைகின்றனர்.
கோடை விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார்
பள்ளிகள், நாளை திறக்கப்படுகின்றன. திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில்,
ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜெய்வாபாய்
மாநகராட்சி பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி
பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு ஆங்கில வழி மாணவர்
சேர்க்கைக்கு, 1,000 முதல் 2,000 ரூபாய் வரை; பிளஸ் 1 சேர்க்கையில், 2,000
முதல், 3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Labels:
பள்ளிக் கல்வி
Subscribe to:
Posts (Atom)