மதுரையைச் சேர்ந்தவர் ஷெரின் சோமிதரன். இவர் ஐஏஎஸ் அதிகாரி. இவர் சென்னையில் வருவாய்த் துறையில் ஜிஎஸ்டி இணை இயக்குனராக பணிபுரிகிறார்.
இவர் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய இரு மகள்களையும் தற்போது அரசு பள்ளியில் படிக்க சேர்த்துள்ளார்.
அதாவது பொதுமக்கள் பலரும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என நம்மிலிருந்து இதனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய இரு மகள்களையும் அரசு பள்ளியில் சேர்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.