
ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என
900 பேர் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு மாத ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி
துறையில் இருந்துஒப்புதல் பெற்று, அதனை கருவூலகங்களுக்கும்,முதன்மை கல்வி
அலுவலகத்திற்கும் அனுப்ப நிதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆசிரியர்கள்
சிரமம்கல்வித்துறையில் இருந்து பட்டியல் அனுப்பியும், நிதித்துறையில் உரிய
நடவடிக்கை எடுக்காததால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதத்திற்கான
சம்பளத்தை பெற முடியாமல் 900 ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.இதுகுறித்து,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக்
ரேய்மண்ட், பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார்.