தெலுங்கானாவில், அரசு பணியாளர் தேர்வு எழுதுவோர், வாட்ச், ஷூ அணிந்து செல்லவும், பர்ஸ் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் அரசு பணியாளர் தேர்வு நடக்கவுள்ளது; எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், இந்த தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வு எழுதுவோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம், வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்வு அறைக்கு, மொபைல் போன், கால்குலேட்டர் உட்பட, மின்னணு பொருட்களை எடுத்து வரக் கூடாது; வாட்ச், ஷூ அணிந்து வரவும், பர்ஸ் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது; உடலில், 'டாட்டூ' வரைந்திருக்க கூடாது. பெண்கள், தங்க நகைகள் அணிந்து வரவும், கைகளில் மருதாணி வைத்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.