Breaking News

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வாய்ப்பு

என்.எல்.சி., என்ற நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் நிறுவனம் தமிழகத்தின் நெய்வேலியில் அமைந்துள்ள பொதுத்துறை எரிசக்தி நிறுவனமாகும். பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் கிராஜூவேட்/டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிக்களை பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி சென்னையில் இருக்கும் என்று தெரிகிறது.


காலியிட விபரம் : டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் (டி.ஏ.டி.,) பிரிவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 70ம், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் 60ம், சிவில் இன்ஜினியரிங்கில் 20ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 10ம், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் தலா 10ம் காலியிடங்கள் உள்ளன. கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் (ஜி.ஏ.டி.,) பிரிவில் மெக்கானிக்கலில் 50ம், எலக்ட்ரிகலில் 50ம், சிவிலில் 15ம், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் தலா 10ம் காலியிடங்கள் உள்ளன.

தேவைகள் : டி.ஏ.டி., பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய பிரிவில் மூன்று வருட டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். ஜி.ஏ.டி., பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : தொழில் நுட்ப படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் 2016, நவ.,30.

விபரங்களுக்கு https://nlcindia.com