Breaking News

ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை?

ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை:


கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,அரசு ஊழி யர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் அலு வலக சிறப்பு பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமை யில் நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.


இக்குழுவினர் அரசு பணியாளர் சங்கங்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளனர்.இதற்கிடையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு, தங்கள் கருத்துகளையும் கேட்கவேண்டும் என ஓய்வூதிய ஆணையரகம் தெரிவித்திருந்தது.

இதன்படி, நிபுணர் குழுவினரை ஓய்வூதிய ஆணையரக அதிகாரிகள்நேற்று சந்தித்தனர்.ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.