Breaking News

வாட்ஸ்அப் சேவை டிசம்பர்-31 முதல் கீழ்க்கண்ட மொபைல்களுக்கு முடக்கம்..!


ஸ்மார்ட் போன்களில் பிரபலமான சாட்டிங் சேவையான வாட்ஸ் அப் டிசம்பர் 31- ஆம் தேதிக்கு பின் கீழ்க்கண்ட மொபைல்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


சிம்பியன் ஓஎஸ் கொண்ட மொபைல் பயன்படுத்தினால் உடனடியாக மாற்றிவிடுங்கள். ஏனெனில் டிசம்பர் 31- ஆம் தேதிக்கு பின் வாட்ஸ் அப் அதில் செயல்படாது. சிம்பியன் ஓஎஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களில் சில தொழில் நுட்ப வசதி இல்லாத காரணத்தால் வாட்ஸ் அப் சேவை வழங்கப்பட மாட்டது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் சேவை முடக்கப்பட உள்ள மொபைல் மாடல்களின் விவரம்

- பிளாக்பெர்ரி OS மற்றும் பிளாக்பெர்ரி 10

- நோக்கியா S40

- நோக்கியா S60

- அண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2

- விண்டோஸ் தொலைபேசி 7.1

- ஆப்பிள் ஐபோன் 3GS மற்றும் ஐபோன்கள் 6iOS

இத்துடன், நோக்கியா E6, நோக்கியா 5233, நோக்கியா C5 03, நோக்கியா ஆஷா 306 மற்றும் நோக்கியா E52 ஆகிய நோக்கியா மாடல் போன்களிலும் இனி வாட்ஸ் அப் வசதி தடை செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2 தொழில்நுட்பத்தில் இயங்கும் மொபைல்களிலும் வாட்ஸ் அப் சேவை இனி செயல்படாது.