மதுரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான (பி.டி.,) பதவி உயர்வு கலந்தாய்வு நேற்று நடந்தது.
இணை இயக்குனர் அமுதவல்லி, முதன்மை கல்விஅலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலையில் நடந்தது. ஆறு பேர் மட்டும் முதுகலை ஆசிரியர்களாக (பி.ஜி.,) பதவி உயர்வு பெற்று, வெளிமாவட்டங்களுக்கு மாறுதல் உத்தரவுகள் பெற்று சென்றனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் 'பதவி உயர்வு வேண்டாம்' என எழுதிக் கொடுத்தனர்.
காரணம் என்ன: பி.டி.,யில் இருந்து பி.ஜி.,யாக பதவிஉயர்வு பெறுபவருக்கு சம்பள உயர்வு மிக குறைவு. மேலும் நகரில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகை படி 1800 ரூபாய், சிட்டி அலவன்ஸ் 360 ரூபாய் என பல சலுகைகள் கிடைக்கின்றன.பெரும்பாலும் நகர் பள்ளிகளில் இடம் காலி இல்லை. இதனால் பதவி உயர்வில் வெளி மாவட்டங்களுக்கு மாறுதலாகி சென்றால் வீட்டு வாடகை படி குறையும். மேலும் அடுத்து உயர்நிலை தலைமையாசிரியர் பதவி உயர்வில் பின்பற்றப்படும் புதிய விதியாலும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பி.ஜி., பதவி உயர்வை தவிர்த்தனர்.