அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிஒன்றிய பள்ளிகள், அரசு தொடக்க பள்ளிகள், அரசு உயர்நிலை பள்ளிகள், கள்ளர், பழங்குடியினர் நல பள்ளிகள், உருது பள்ளிகள் ஆகியவற்றின், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும்உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
*இதன்படி, 'பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள பெட்டி கடைகள், 'ஸ்டேஷனரி' கடைகளில் விற்கப்படும் சாக் லேட் போன்ற இனிப்பு பொருட்களை கண் காணிக்க வேண்டும்*
சந்தேகப்படும் படியாக, குறிப்பிட்ட கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தாலோ, *மாணவர்கள் குறிப்பிட்ட தின்பண்டத்தை விரும்பி சாப்பிட்டாலோ* உள்ளூர் சுகாதார துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த ப்பட்டுள்ளனர்.
*புகார் எண் :* சந்தேகப்படும்படியாக சாக்லேட், உணவுப்பொருட்கள் விற்பனை நடந்தால், *உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவிற்கு, 94440 42322 எண்ணிலும்; இந்திய மருத்துவத் துறையின், மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணையத்திற்கு, 044 - 2622 3653* எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.