Breaking News

தினமும் காலை, மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும், என, தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அட்வைஸ்


வகுப்பறை கண்காணிப்பு; கல்வித்துறை அட்வைஸ்


தினமும் காலை,மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும்,என,தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு தேர்ச்சியில்,கல்வித்துறை எதிர்பார்த்ததை போல அனைத்து அரசு பள்ளிகளும், 100சதவீத தேர்ச்சியை எட்டவில்லை. பல மாவட்டங்களில்,தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மீதும் அதிருப்தி ஏற்பட்டது.

பல மாவட்டங்களில்,கற்பித்தல் முறையில்,கல்வித்துறை கூறிய முக்கிய மாற்றங்களை,நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் செய்யாததே தேர்ச்சி குறையமுக்கிய காரணம் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. "அனைவரும் தேர்ச்சி&'என்ற முறையில்,மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவதால்,ஆறாம் வகுப்பு முதல்8ம் வகுப்பு வரை,பல பள்ளிகளில் மாணவ,மாணவியருக்கு முறையாக கற்பித்தல்நடக்காததும்,அத்தகைய மாணவர்கள்,தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைவதும்,கல்வித்துறைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்ச்சி சதவீதம் குறைந்ததால்,ஆசிரியர்கள் மீது முழு கவனத்தை திருப்பியுள்ள கல்வித்துறை,ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவியருக்கு,பாட புத்தகத்தை வாசிக்க தெரியவில்லை எனில்,சம்பந்தப்பட்ட பாட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு.மெமோ வழங்கவும்,முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமையாசியராக இருப்பவர்கள்,அறையில் இருப்பதை தவிர்த்து,தினமும் காலை,மாலை நேரங்களில் தலா இரண்டு வகுப்பறைகளுக்கு நேரில் சென்று கண்காணிக்க வேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும் முறையை கவனிக்க வேண்டும். கற்றல்,கற்பித்தல் ஒழுங்காக நடக்கிறதா என்பதையும்,கற்பித்தல் முறையில் குறை இருந்தால்,அதை ஆசிரியருக்குசுட்டிக்காட்டி திருத்தம் செய்யவும் வேண்டும் என,பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.