Breaking News

போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு


சிவகங்கை,:போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது.
சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து 2012, 2013 ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 

கல்வித்துறை உத்தரவிட்டது.தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் தலைமை ஆசிரியர்கள் தகுதிச்சான்று பெற முடியாமல் தவித்து வந்தனர்.போலி ஆசிரியர்களை கண்டு பிடிப்பதிலும் சிக்கல் இருந்தது. தற்போது 'தகுதித் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தகுதிச் சான்றுகளை முதன்மை கல்வி 
அலுவலர்களே அளித்தனர். இதனால் உண்மைத் தன்மை சான்றுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுப்படுத்தி உள்ளது.


தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.