Breaking News
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: 'தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கு, இந்த ஆண்டில் தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Labels:
TNPSC
பிளஸ் 2 தேர்வுக்கு அனுமதிச் சீட்டு: தனித் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் சனிக்கிழமை (ஜனவரி 30) முதல் பிப்ரவரி 1 வரை தேர்வறை அனுமதிச் சீட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
Labels:
HSC,
பள்ளிக் கல்வி
மக்கள் தொகை பதிவேட்டுப் பணி : ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி வழக்கு
ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:
Labels:
COURT,
தொடக்க கல்வி
குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வு!
தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
Labels:
/LETTER,
தொடக்க கல்வி
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பள்ளிகள் தோறும் பிப்.10ல் வழங்கல்
சுகாதாரத்துறை சார்பில் பிப்.,10ல் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.மத்தியரசு சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளாக பிப்.,10 கடை பிடிக்கப்படுகிறது. அன்று சுகாதாரத்துறை சார்பில் அங்கன்வாடிமையம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரை வழங்கப்பட உள்ளது.
Labels:
தொடக்க கல்வி
வி.ஏ.ஓ., தேர்வு 800;பேருக்கு 10 லட்சம் பேர் போட்டி
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங் களுக்கு, பிப்., 28ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
Labels:
TNPSC
வாக்காளர் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, மீண்டும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. நாளை மற்றும் பிப்., 6ல், மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடைபெறும். இதில், வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
Labels:
பத்திரிக்கை செய்தி
ஆதார், ரேஷன் கார்டுகளின் எண்கள் மக்கள்தொகை பதிவேட்டில் இணைப்பு பணி: 10 மாவட்டங்களில் தொடங்கின
அரசின் திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடையும் வகையில் மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டு, கைபேசி எண்களை இணைக்கும் பணி 10 மாவட்டங்களில் தொடங் கப்பட்டுள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
ஆதார், ரேஷன் கார்டுகளின் எண்கள் மக்கள்தொகை பதிவேட்டில் இணைப்பு பணி: 10 மாவட்டங்களில் தொடங்கின
அரசின் திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடையும் வகையில் மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டு, கைபேசி எண்களை இணைக்கும் பணி 10 மாவட்டங்களில் தொடங் கப்பட்டுள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
அரசு துறையில் வாய்ப்பு-ஐ.டி.ஐ.,களில்இளநிலை பயிற்சியாளர் பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சிதுறையின் கீழ் செயல்படும், ஐ.டி.ஐ.,களில் காலியாக உள்ள 329 இளநிலை பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பொறியியல் அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 1.
மேலும் விவரங்களுக்கு: www.skilltraining.tn.gov.in
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன. ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.
Labels:
மருத்துவம்
ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்
ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
CPS - ஒரு துறை பிடித்தம் செய்த தொகையினை மற்றொரு துறைக்கு பணியாளர் செல்லும் போது பணியாளரின் புதிய கணக்கு எண்ணுக்கு மாற்றம் செய்யலாம்
CLICK HERE DOWNLOAD to CPS TRANSFER ORDER
எப்போதும் ஆசிரியர் நலன் காக்கும் இயக்கம் TNGTF
------------------------****---------------
தொடக்க கல்வித் துறையில் இருந்து நகராட்சி/பள்ளி கல்வித்துறைக்குச் சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டு cps கணக்கு எண் வைத்திருந்தார்கள்.
எப்போதும் ஆசிரியர் நலன் காக்கும் இயக்கம் TNGTF
------------------------****---------------
தொடக்க கல்வித் துறையில் இருந்து நகராட்சி/பள்ளி கல்வித்துறைக்குச் சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டு cps கணக்கு எண் வைத்திருந்தார்கள்.
Labels:
ASSOCIATION NEWS,
CPS
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2016ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பாக அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் விவரம் 31.12.2008 வரை கோருதல் சார்பான உத்தரவு
Labels:
பள்ளிக் கல்வி
'மொபைல் ஆப்'பில் 'இ - சேவை' மைய தகவல்
சென்னை: அரசு இ - சேவை மையங்களில், பல்வேறு வகையான அரசு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, சொத்து வரி, தொழில் வரி, கம்பெனி வரி, மின் கட்டணம் ஆகியவற்றையும், இ - சேவை மையத்தில் செலுத்தலாம்.
ஆதார் அட்டை பெறுதல், பாஸ்போர்ட் சரி பார்த்தலுக்கான நாள் மற்றும் நேரம் பெற்றுக் கொள்ளுதல், ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன. அரசு இ - சேவை மையம் தொடர்பான தகவல்கள், மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ள, 'TACTV' என்ற பெயரில்,
Labels:
COMPUTER,
பத்திரிக்கை செய்தி
போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை
போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மடத்துக்குளம் வட்டம், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, செங்கண்டிபுதூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இதில், ராமசாமி கொழுமத்திலும், சிவராஜ் துங்காவியிலும் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.
Labels:
பத்திரிக்கை செய்தி
30-முதல் ஆசிரியர்கள் தொடர் மறியல்
வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜேக்டோ அறிவித்துள்ளது.
கோவை தாமஸ் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜேக்டோ மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
Labels:
ASSOCIATION NEWS
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்காமல், அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்ய வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது. இந்த திட்டப்படி, 'அனைவருக்கும் கட்டாயமாக பள்ளிக்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம், சரியாக நிறைவேறவில்லை' என்ற, புகார் எழுந்தது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை
'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது.
Labels:
TNPSC
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்கணக்கெடுக்க அரசு உத்தரவு
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு, 2015- - 16ம் கல்வியாண்டில் அரசு பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் விவரத்தை சேகரித்து அனுப்ப, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 'பிப்., அல்லது மார்ச் மாதத்தில், சட்டசபை பட்ஜெட் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதால், சத்துணவு திட்டத்தில் மானியம் மற்றும் சத்துணவு சமையல் பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஊழியர் எண்ணிக்கை அடிப்படையில் இவ்விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. 'மாவட்டம் தோறும் பள்ளிகள் வாரியாக,
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் சேகரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது' என்றார்.
Labels:
தொடக்க கல்வி
தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகளின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊ.ஒ. மற்றும் நிதி உதவி பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின்
கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியானது தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகளின்படி 25-01-2016 முதல் 28-01-2016 வரை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
பள்ளிக்கு செல்லாமல் ’பினாமி’ நியமித்த தலைமை ஆசிரியை!
மலைப்பகுதியில் உள்ள, உறைவிடப்பள்ளி தலைமையாசிரியை, பள்ளிக்கு செல்லாமல், தன்னிச்சையாக ஒருவரை நியமித்து, சம்பளம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அடுத்த, போதமலை மலைப்பகுதியில் உள்ள கீழூரில், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக, உறைவிட துவக்கப்பள்ளி செயல்படுகிறது.
Labels:
பத்திரிக்கை செய்தி
7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட் - முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை
பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
Labels:
பள்ளிக் கல்வி
சி.இ.ஓ., டி.இ.ஓ., பணியிடங்கள் காலி; பணிகள் பாதிக்கும் அபாயம்!
பள்ளிக் கல்வித் துறையில், 57 உயர் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், பொதுத் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில், 32வருவாய் மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி
Labels:
தொடக்க கல்வி
CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTRE ஆணையாளர் வலியுறுத்தல்
CPS தொடர்பான அனைத்து அரசாணைகளும் நிதித்துறை மூலம் வெளியிடப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத்துறை வாயிலாக செயல்படுகிறது.
CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTRE ஆணையாளர் நிதித்துறை முதன்மைச்செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.
Labels:
CPS
257 சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடம்: ஜன. 29 வரை விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்ட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 257 அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு ஜன. 29ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கழிப்பறை பராமரிப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு: இம்மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க முடிவு
அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை துப்புரவு செய்து பராமரிக்கும் பொறுப்பை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள், புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு தடை
'தனியார் நிறுவனம் நடத்தும் நடைபயண நிகழ்ச்சிகளில், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை' என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
Labels:
பள்ளிக் கல்வி
10ம் வகுப்பு திருப்ப தேர்வுகள்: பிப்ரவரி 1ல் தொடக்கம்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்பத் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் டிசம்பர் மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடப்பது வழக்கம்.
Labels:
SSLC,
பள்ளிக் கல்வி
வாக்காளர் பட்டியலில் பெயரில்லாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராஜேஷ் லக்கானி
நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில், 5.79 கோடி வாக்காளர்கள், வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்கவுள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களில், எட்டு லட்சம் பேருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று கூறியதாவது:
Labels:
பத்திரிக்கை செய்தி
மீண்டும் உடைந்தது ஆசிரியர் கூட்டுக்குழு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசிடம் முன்னெடுத்து வைக்கவும், அவர்களை ஒருங்கிணைக்கவும், ஜாக்டோ, ஜாக்டா என்ற அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, 'டேக்டோ' என்ற புதிய அமைப்பு உருவாகிஉள்ளது.
Labels:
தொடக்க கல்வி
அரசு பள்ளிகளில் எழுத்தர் பணிக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணி அமர்த்தலாம்
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கு, ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு எழுத்தர்களை ஓராண்டுக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தலாம் என்று மாநில கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மாநில அரசின் கீழ் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளதாகவும், அந்த பணிகளை கூடுதலாக ஆசிரியர்களே கவனிக்கும் நெருக்கடியும் இருப்பதாக புகார் எழுந்தது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் பணி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி எனப்படும் டி.எம்.பி வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளரிக்கல் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான, மூன்றாம் கட்ட நியமனத்துக்கு, 2015 ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, பிப்.,1ல் நடக்கிறது.
Labels:
TNPSC
தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி
ஒடிசாவில் செயல்பட்டு வரும் National Rice Research Institute-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/2015
பணி: Technician (T-1)
காலியிடங்கள்: 42
போலிச் சான்றிதழ் விவகாரம்ஜாமீன் கோரிய இருவரின் மனுக்கள் தள்ளுபடி
தருமபுரியில் போலிச் சான்றிதழ் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட இருவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை பாலக்கோடு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றத்தின் போது இவரது சான்றிதழ்களை சரிபார்த்த கல்வித் துறை அதிகாரிகள், அதில் உண்மை தன்மை இல்லாததால், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில், வழக்குப் பதிவு செய்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்ததில், முனியப்பன் போலியாகச் சான்றிதழ் தயாரித்து கல்வித் துறையில் சமர்ப்பித்து ஆசிரியராகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
Labels:
பத்திரிக்கை செய்தி
Subscribe to:
Posts (Atom)