Breaking News
கம்ப்யூட்டர் பகுதி - வேர்ட் டிப்ஸ்…டாகுமெண்ட்டின் இடையே பிரிக்க
டாகுமெண்ட்டின் இடையே பிரிக்க: வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில், பலவகையான இடைவெளிகளை (breaks) உருவாக்கலாம். நாம் தொடர்ந்து டாகுமெண்ட் ஒன்றில் டைப் செய்கையில், வேர்ட் நாம் ஒரு பக்கத்தின் எந்த இடத்தில் டைப் செய்து கொண்டிருக்கிறோம் என்பதனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முழுமையானவுடன், தானாக அடுத்த பக்கத்தினை உருவாக்கி, நாம் டைப் செய்வதனை தொடர்ந்து மேற்கொள்ள உதவிடுகிறது. டாகுமெண்ட் Normal வியூவில் இருந்தால், இந்த இடைவெளி சிறிய இடைக்கோடாகக் காட்டப்படும்.
Labels:
COMPUTER
பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு
சென்னை:தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், நவ., 2ல் வெளியாகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பரில் நடந்த தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்,
நவ., 2 மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள், http:/dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், நவ., 4 முதல், 6 வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்துக்கு நேரில் சென்று, 'ஆன்லைனில்' உரிய கட்டணத்துடன் பதிவு செய்ய வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில் தான், மறுகூட்டல் முடிவு வெளியாகும்.
Labels:
HSC
பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு
சென்னை:தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், நவ., 2ல் வெளியாகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பரில் நடந்த தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்,
நவ., 2 மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள், http:/dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், நவ., 4 முதல், 6 வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்துக்கு நேரில் சென்று, 'ஆன்லைனில்' உரிய கட்டணத்துடன் பதிவு செய்ய வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில் தான், மறுகூட்டல் முடிவு வெளியாகும்.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி
அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.
இதில், 400 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வில் தமிழ், அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு, போதிய காலியிடம் இல்லை. நேற்றைய கலந்தாய்வில், 1989ல் பணியில் சேர்ந்த, அறிவியல் பட்டதாரிகளுக்கே பதவி உயர்வு பரிசீலிக்கப்பட்டது.
தமிழ் பாடத்தில், 2001; கணிதம், 2002; வரலாறு, 2006ல் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் மட்டும், 2014ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு கூட, பதவி உயர்வு கிடைத்தது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறும்போது, 'தமிழ், அறிவியல், வரலாறு பாடங்களில் காலியிட எண்ணிக்கையை விட, அதில் பட்டம் பெற்ற ஆசிரியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள், ஆங்கில பட்டப்படிப்பு முடிக்காததால், அவர்களால், பதவி உயர்வு பெற முடியவில்லை' என்றனர்.
Labels:
பள்ளிக் கல்வி
CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
Labels:
TET
மனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரும், அரசு தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-பள்ளிக்கல்வித்துறைக்கு என அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. அதனால் பணம் எதுவும் செலவளிக்காமல் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள், காலணிகள், சைக்கிள் உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
Labels:
பள்ளிக் கல்வி
ஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.
ஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையைஅறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) வைத்து இருப்பர்வார்களுக்கு 2G, 3G மற்றும் 4G பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்தசலுகை உண்டு.
Labels:
பத்திரிக்கை செய்தி
தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் கல்வியின் முக்கியத்துவம், தனித்திறன் வளர்ப்பு, உடல் நலன் மற்றும் சுயதொழில் போன்ற தலைப்புகளில், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்
குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடக்கிறது.
Labels:
TNPSC
திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை
சென்னை :'தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது; ஆசிரியர்களாக பணிபுரிவோர் மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம். மொத்தம், 1,000 பேர் சேர்க்கப்படுவர். இதற்கு, நவ., 30க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, பல்கலை அறிவித்துள்ளது. 'கலந்தாய்வு டிசம்பரில் நடக்கும்; ஜனவரி முதல், வகுப்புகள் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Labels:
B.ED,
UNIVERSITY
16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளிகவனிப்பாரா கல்வி செயலர்
மதுரை:தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.
Labels:
பள்ளிக் கல்வி
தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு
சென்னை:சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் கல்வியின் முக்கியத்துவம், தனித்திறன் வளர்ப்பு, உடல் நலன் மற்றும் சுயதொழில் போன்ற தலைப்புகளில், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு
சென்னை:'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது; ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து, தகுதி பெற்றவர்களின் தேர்வெண் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அவர்களில், இளநிலை உதவியாளர் பணிக்கு, நவ., 16; தட்டச்சருக்கு டிச., 4; சுருக்கெழுத்து நிலை -3 பதவிக்கு, டிச., 14ல் கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை, http://www.tnpsc.gov.in/results.html இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.
Labels:
TNPSC
கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை
தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொரு அலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது. தேர்தல் பணியில், யார் யார் ஈடுபட வேண்டும், யார் யாருக்கு விதிவிலக்கு என, தேர்தல் கமிஷன்
அறிவித்துள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்
சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வினாத்தாள்கள் கடினமாக இருக்கும்படி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கு நுாறு, 'சென்டம்' எடுக்கும் மாணவர்; மாநில, 'ரேங்க்' பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு எளிமையான கேள்விகளும், மதிப்பெண்ணில் காட்டப்படும் தாராளமும் காரணம். எனவே, மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்துள்ளனரா அல்லது மனப்பாடம் செய்துள்ளனரா என, அறிய முடிவதில்லை. இதை, சோதனை செய்யும் விதமாக, இந்த ஆண்டு வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு, பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து, புதிய கேள்விகள் கேட்குமாறு, உத்தரவிடப்பட்டு உள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
குரூப்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2-இல் (குரூப் 2) உள்ளடங்கிய பதவிகளை நிரப்பிட வேண்டி, தகுதியுடைய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2ல் உள்ளடங்கிய பதவிகளை நிரப்பிட வேண்டி, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பட்டதாரிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Labels:
TNPSC
ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்
ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்
- இணைய தள முகவரிக்கு செல்லவும்.
Labels:
பத்திரிக்கை செய்தி
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்: அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரை
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜான்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு கடந்த 2011–ம் ஆண்டு வந்துள்ளார். அப்போது அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவனுக்கு நல்ல கல்வி வழங்குவதாக கூறி, அவனை தன்னுடன் டெல்லிக்கு வரும்படி கூறியுள்ளார். அந்த மாணவனின் தாயாருக்கு பணமும் கொடுத்துள்ளார். பின்னர், தாயின் சம்மதத்துடன், அந்த மாணவனை தன்னுடன் டெல்லிக்கு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந் தேதி அழைத்து சென்றுள்ளார்.
Labels:
பத்திரிக்கை செய்தி
கலந்தாய்வில் காலியிடங்கள் மறைப்பு பட்டதாரி ஆசிரியர்கள் புகார்
சிவகங்கை:சிவகங்கையில் நடந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில், காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
சிவகங்கையில் உள் மாவட்டத்திற்கான மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. முதன்மைக் கல்வி செந்திவேல்முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் நடத்தினர். வரலாறு பாடத்திற்கான காலியிடங்களை முன்கூட்டியே அறிவிப்பு பலகையில் வெளியிட ஆசிரியர்கள் வலியுறுத்தினர். 'கலந்தாய்வு நடக்கும் அறைக்குள் மட்டுமே அதை வெளியிட முடியும்' என அதிகாரிகள் கூறினர். இதை கண்டித்து ஆசிரியர்கள் கோஷமிட்டனர். பின், ஒவ்வொரு பாடத்திற்கும் கலந்தாய்வு துவங்கும் முன் காலியிடம் விவரம் அறிவிக்கப்பட்டது.ஆனால் காலி இடங்கள் மறைக்கப்பட்டதாக பட்டதாரி ஆசிரியர் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகத்தினர் தெரிவித்தனர்.
Labels:
COUNSELLING
வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு
வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற வசதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது, வேலை தேடுவோர்க்கு அவ்வப்போது வெளி வரும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகள், மத்திய, மாநில அரசு சார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது.1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன.
மனமொத்த இடமாறுதல் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் மாறுதல்கள் வழங்கப்பட்டன. ஒரு மனமொத்த இடமாறுதல் வழங்கப்பட்டால் அது இரண்டு இடமாறுதல்களாக கணக்கில் கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்ததாக, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக்.27) நடைபெற உள்ளது.
அதன் பிறகு, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்வதற்கான "ஆன்-லைன்' கலந்தாய்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
Labels:
COUNSELLING
வரலாற்று சுவடுகள் - அலெக்ஸாண்டரின் ஆசைகள்
மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.
என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !
நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!
என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!
தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.
Labels:
வரலாற்று சுவடுகள்
மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசியநரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி, ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக் காக சிரமப்பட வேண்டியுள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
புதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்
புதியபள்ளி தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறைவரவேற்றுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2016-17-ஆம் கல்வி ஆண்டில் புதிதாக மானியம் பெறாத தொடக்கநிலை ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தொடங்குவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Labels:
பள்ளிக் கல்வி
அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை
தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இதனடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு: அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, வெளிநாடு செல்ல முடியும்.இந்த அனுமதியை பெற, தங்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தர வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
தீபாவளி முன்பணம்: ஆசிரியர்களுக்கு சந்தேகம்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை முன்பணம் என, 5,000 ரூபாய் வழங்கப்படும். தீபாவளியை ஒட்டிதான், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், அதிக அளவில், முன்பணத்துக்கு விண்ணப்பிப்பர். அதேபோல், அனைத்து பள்ளிகளில் இருந்தும், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு, விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஆனால், இதுவரை நிதித் துறை அனுமதி வரவில்லை. அதனால், முன்பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வழக்கமாக, தீபாவளிக்கு, 15 நாள் முன்பே, முன்பணம் வழங்கப்பட்டு விடும். ஆனால், இன்னும் நிதித் துறை ஒதுக்கீடு உத்தரவு வரவில்லை என்கின்றனர். ஏற்கனவே, அகவிலைப்படி உயர்வுக்கான, நான்கு மாத நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளதால், பண்டிகை முன்பணம் கேள்விக்குறியாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Labels:
பள்ளிக் கல்வி
ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி
மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க, வரும், 27ல், சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன், நற்பண்புகள் மற்றும் தனித்திறனை வளர்க்கும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசிரியர்களுக்கு, முதற்கட்டமாக ஒழுக்கம் மற்றும் நற்பண்பு மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் டி.பி.ஐ., வளாகத்திலுள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 27, 28ல், பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அடிப்படை கணினி அறிவை வளர்க்கும் சிறப்பு பயிற்சியை, மூன்று நாட்கள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும், 50 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
Labels:
தொடக்க கல்வி
ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் சார்புநிலை சேவை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல், பொருளாதாரம், நிலவியல்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தத் தேர்வு டிசம்பர் 13-ஆம் தேதி காலை, மாலை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
விளம்பர எண்: 422 தேதி: 05.10.2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Research Assistant in Statistics - 01
Labels:
TNPSC
குரூப் - 2 ஏ விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா?
தமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, தேர்வு தேதியை ஜனவரி, 24க்கு தள்ளிவைத்தார். 'கூடுதலாக, மூன்று துறைகளில், 84 காலியிடங்களும் சேர்த்து நிரப்பப்படும்' என, அறிவித்து உள்ளார்.
ஆனால், விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை, டி.என்.பி.எஸ்.சி., நீட்டிக்கவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, நவம்பர், 11, இரவு, 11:59க்குள் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்கு, இன்னும், 60 நாட்கள் இருப்பதால், நிறைய பேர் விண்ணப்பிக்க முடியும்; எனவே, அதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Labels:
TNPSC
நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது.
10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. காலாண்டுத் தேர்வு முடிந்து, பள்ளிகளில் இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, தீபாவளி விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவ இடைத்தேர்வை நடத்த, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
நவ., 16ம் தேதி தேர்வுகளை துவங்கி, 20ம் தேதிக்குள் முடிக்கவும், அதன்பின், அரையாண்டுத் தேர்வுக்கான பாடப்பகுதிகளை முடிக்கவும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
'இந்தத் தேர்வுக்கு மாவட்ட அளவில், மாவட்ட தேர்வுக்குழு மூலம், ஒரே வகையான வினாத்தாள்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
CPS account slip 2009. முதல் பிப்ரவரி 2015 வரை விடுபட்ட தொகைகள் பதிவுடன்
CLICK HERE
இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும்.
பின் annual account slip ல் சொடுக்கவும்
பின் 2014 -15 வருடத்தை select செய்து submit செய்யவும் .
இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும்.
பின் annual account slip ல் சொடுக்கவும்
பின் 2014 -15 வருடத்தை select செய்து submit செய்யவும் .
TET தேர்வில் மட்டும் ஏன் இந்த பாகுபாடு?
1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை
2. SLET, NET, PGTRB, TNPSC Exam, Bank Exam, Railway Exam, அவ்வளவு ஏன் இந்திய அரசியல் அமைப்புகள் மிக முக்கிய தேர்வாக கருதப்படும் IAS தேர்விற்கும் கூட படிப்பு மற்றும் வயது சார்ந்த அடிப்படை தகுதிகளை அடுத்து தேர்வாளர்களுக்கு அந்தந்த துறையில் நடத்தப்படும் மதிப்பெண் அடிப்படையில்தான் பணி வழங்கப்படுகிறது. டெட் தேர்வில் மட்டும் முரண்பாடு ஏன்?
Labels:
TET
சமையல்- தக்காளி துவரம்பருப்பு சூப்
எப்போதும் தக்காளி சூப்பை சாப்பிடுபவர்கள், இந்த வித்தியாசமான தக்காளி துவரம்பருப்பு சூப்பை செய்து சாப்பிடலாம். இதில் துவரம் பருப்பை சேர்ப்பதனால் உடம்பிற்கு நல்லதும் கூட.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/4 கிலோ
வெங்காயம் - 150 கிராம்
துவரம்பருப்பு - 1/4 ஆழாக்கு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/4 கிலோ
வெங்காயம் - 150 கிராம்
துவரம்பருப்பு - 1/4 ஆழாக்கு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
Labels:
சமையல்
மிகுந்த பயனுள்ள சமையல் குறிப்புகள் :
1.வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
2.கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
3.பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
4.தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.
Labels:
சமையல்
விடுமுறைக் கதைகள்- “ யார் முட்டாள் ? ”
அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அ,னுப்பியிருந்தார்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்று முல்லா மறு மொழி அனுப்பியிருந்தார்.
அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார். ஆனால் தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது.
Labels:
கதைப் பகுதி
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 4.20 லட்சம் பேர் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் 2003–ம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Labels:
CPS
குரூப் 2A தேர்வு தேதி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை 12.10.2015 அன்று வெளியிட்டிருந்தது.
மேற்படி ஒருங்கிணைந்த சார்நிலைப் பணியில், வனத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை மற்றும் நிலஅளவை துறைகளில் உள்ள உதவியாளர் பதவி, தலைமைச்செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள நேர்முக உதவியாளர் ஆகியவற்றில் 84 கூடுதல் பதவிகள் உள்ளடக்கியதுணை அறிவிக்கையினை இன்று (20.10.2015) வெளியிட்டுள்ளது. அவ்வறிவிக்கையில் வெளியிடப்பட்ட தேர்வு தேதியும் மாற்றப்பட்டு 24.01.2016 அன்று இத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
Labels:
TNPSC
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: இணையத்தில் கணக்கு விவரங்கள்: தமிழக அரசு தகவல்!
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரலில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள் உள்பட 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படிக்கென மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காகச் செலுத்தும்.
தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரலில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள் உள்பட 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படிக்கென மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காகச் செலுத்தும்.
Labels:
CPS
4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு: தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுக்காக சுமார் 8 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமி்க்கும் வகையில் கடந்த மே மாதம் 31-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம்
ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.
பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
அழகப்பா பல்கலை: டிச.,26 முதல் தொலை தூர கல்வி தேர்வுகள் தொடக்கம்!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அக்டோபர் 26-யிலிருந்து நவம்பர் 9-க்குள் www.alagappauniversity.ac.in இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையத்தில் தேர்வு கட்டணம் செலுத்தி உடனடியாக நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விருதுநகர் அழகப்பா பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வாயிலாகவும் கட்டணத்தை செலுத்தி நுழைவுச்சீட்டை பெறலாம். செமஸ்டர் முறை தேர்வு எழுதுபவர்களும், தேர்வு எழுதி தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு அழகப்பா பல்கலை விருதுநகர் கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனமுதன்மை நிர்வாகி காசிராமன் தெரிவித்தார்.
Labels:
UNIVERSITY
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடக்கம்!!
பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)
பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)
இடைநிலை ஆசிரியர் / சிறப்பு ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர்கள் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு: 30.10.2015 (இணையதளம் வழியாக)
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களோடு புதிதாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
COUNSELLING,
பள்ளிக் கல்வி
ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்
போராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சமீபத்தில் நடத்திய, ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியானது. அதனால், ஆசிரியர்களில் ஒரு தரப்பினரை மட்டுமாவது சரிக்கட்டும் வகையில், ஆறாவது சம்பளக் கமிஷன் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
Subscribe to:
Posts (Atom)