Breaking News
அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
சென்னை:''கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
இளையராஜா, ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பில் தமிழ் பாடம்
பிளஸ் 1 புதிய பாடப் புத்தகத்தில், இசையமைப்பாளர்கள் இளையராஜா,
ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்தும்,
'வாடி வாசல்' என்ற தலைப்பில், புதிய பாடம் சேர்க்கப்பட்டு உள்ளது.
புதிய பாடத்திட்டத்தில் புதிதாக 286 பாடங்கள்..!
கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், "புதிய
பாடத்திட்டத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன" எனத்
தெரிவித்துள்ளார்.
மேலும், சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் கூட அரசு பள்ளிகளில் படிகின்ற நிலையை உருவாக்கி காட்டியுள்ளோம்.
பாடங்களை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்கின்ற கல்வியை உருவாக்கியுள்ளோம் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக்
கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.
Subscribe to:
Posts (Atom)







