Breaking News

சம்பளம் வழங்குவதில் காலதாமதம்: கல்வி அதிகாரி மீது ஆசிரியர்கள் புகார்

சாத்தான்குளம் வட்டாரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் 92 உள்ளன. இப்பள்ளிகளில் 250–க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஆன்லைனில் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் ஏற்றப்படாததால் மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் பெறாத அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் சாத்தான்குளம் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் முறையிட்டனர்.அப்போது கல்வி அதிகாரி உங்கள் பணி விபரம் ஆன்லைனில் ஏற்றப்படாததால் சம்பளம் வழங்கவில்லை.

அரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது-உயர் நீதிமன்ற மதுரை கிளை

அரசு வேலைவாய்ப்பில், வயது வரம்பு சலுகை காட்ட முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேனி, பெரியகுளம், கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கனிஎன்பவர் தாக்கல் செய்த மனு:


கனரக வாகனம் ஓட்ட உரிமம் பெற்று, கடந்த, 2002ல், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 13 ஆண்டுகளாக, எந்த நேர்காணலுக்கும் அழைக்கவில்லை.கடந்த, மே, 1ல், மருத்துவப் பணிகள் நியமன தேர்வு வாரியம், டிரைவர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டது. அதில், வயது வரம்பு, 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டியலில், என் பெயர் இல்லை. ஜூலை, 1ம் தேதியை தகுதியாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விட, 24 நாட்கள் கடந்ததாகக் கூறி, நிராகரித்தனர்.

சுயநிதி பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு கே.ஜி., - முதல் வகுப்பு வரை மட்டுமே

தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் என, மெட்ரிக்., பள்ளிகள் இயக்குனரகம் தெளிவுப்படுத்தியுள்ளது.


ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் பெறும் பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் சேர்க்க கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது. இதற்கான கல்வி கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்துகிறது.

PAY CONTINUATION ORDER FOR 1880 COMPUTER INSTRUCTORS RELEASED UPTO 31.12.2015

TNPSC - POSTS INCLUDED IN GROUP –IV SERVICES, 2014 – 2015,(DATE OF WRITTEN EXAMINATION: 21.12.2014) CERTIFICATE VERIFICATION SCHEDULE ‐ JUNIOR ASSISTANT

SSA - 20/06/2015 மற்றும் 27/06/2015 ஆகிய நாட்களில் ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - பயிற்சி ஏடு

ஊதிய பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ?

தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன் .இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள் ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு .கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க பட்டது . அதன் அடிப்படையில் பல்வேறு அரசு ஆணைகள் வெளியிட்டது .அதில் ஆசிரியர்களுக்கு எந்தவொரு பயனுமில்லை .

அரசுப் பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில், தொடக்க கல்வித்துறையின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.


கோவை மாவட்டத்தில், 860 அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுற்றுச்சுவர் பாதி கட்டிய நிலையிலும், முழுமையாக இல்லாமலும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளன.இதனால், பள்ளி வளாகத்தினுள் வெளியாட்கள் நுழைவதும், மாணவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. ஆட்கடத்தல் மற்றும்வனவிலங்குகள் அச்சுறுத்தல் என பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது.

மாணவர்களுக்கு கடும் தண்டனை:ஒரே நாளில் 80 பேர் டி.சி. பெற்றனர்

திருச்சி ஜீயபுரம் அருகேயுள்ள தனியார் உயர் நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளரின் காரில் மாணவியின் பெயர் கிறுக்கப்பட்டிருந்ததால், பள்ளி நிர்வாகம் 150 மாணவ, மாணவிகளை முழங்காலிட்டு பலமணி நேரம் நிற்கவைத்தனர். இதை கண்டித்து 80 மாணவ, மாணவிகள் மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு வெளியேறினர்.

ஜீயபுரம் அருகேயுள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அண்மையில் இந்தப் பள்ளி வளாகத்தில் நின்ற பள்ளித் தாளாளரின் காரில் 5-ம் வகுப்பு மாணவி ஒருவரின் பெயர் இரும்புக் கம்பியால் எழுதப்பட்டிருந்தது.

அகஇ - "பகுதிநேர ஆசிரியர்களின் கடமைகளும் பொறுப்புகளும்" - அறிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்



அதேஇ - பத்தாம் வகுப்பு சிறப்பத் துணைத்தேர்வு - 09/06/2015 மற்றும் 10/06/2015 ஆகிய நாட்களில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் முறை - இயக்குனர் செயல்முறைகள்


CRC compensate Leave details.

Upper primary.
*13/12/14 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 12/06/15 க்குள் விடுப்பு  எடுக்கவேண்டும்.
*14/02/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 13/08/15 க்குள் விடுப்பு  எடுக்கவேண்டும்.
* 14/03/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 13/09/15 க்குள் விடுப்பு  எடுக்கவேண்டும்.
Primary Level.
13/12/14 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 12/06/15 க்குள் விடுப்பு  எடுக்கவேண்டும்.
* 03/01/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 02/07/15 க்குள் விடுப்பு  எடுக்கவேண்டும்.

*28/02/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 27/08/15 க்குள் விடுப்பு  எடுக்கவேண்டும்.
* 14/03/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 13/09/15 க்குள் விடுப்பு  எடுக்கவேண்டும்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு:2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது.

ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத 615 சங்கங்கள் நீக்கம்: பதிவுத்துறை நடவடிக்கை

மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத, 615 சங்கங்களை அதற்கான பதிவு பட்டியலில் இருந்து நீக்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில், கல்வி, கலை, சமூக மேம்பாடு போன்ற காரணங்களுக்காக துவங்கப்படும் சங்கங்கள் மற்றும் மன்றங்கள் அனைத்தும், 1975ம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டும்.
இதன்படி, தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 1.52 லட்சம் சங்கங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சங்கங்கள், உரிய கால இடைவெளியில் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஆசிரியர் 'கவுன்சிலிங்' தாமதம்

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலால் பணியிட மாறுதல் 'கவுன்சிலிங்' தாமதம் ஆவதாக ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் பணிபுரிகின்றனர்.


மாவட்டம் விட்டு மாவட்டம் :ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கான 'கவுன்சிலிங்' கடந்த சில ஆண்டுகளாக இணைய தளம் மூலம் நடத்தப்படுகிறது.இதற்கு ஏப்ரல் மாத இறுதியில் விண்ணப்பம் கோரப்பட்டு மே மாதத்தின் இறுதி வாரத்தில் 'கவுன்சிலிங்' முடிந்து ஜூனில் பள்ளி திறந்ததும் இடமாறுதல் பெற்றவர்கள் பணியில் சேருவதற்கான உத்தரவு வழங்கப்படுவது வழக்கம்.

600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்வி இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், மெட்ரிக். பள்ளிகளில் பெறப்படும் கூடுதல் கட்டணத்தில் இருந்து ஏழைப் பெற்றோர்களை பாதுகாக்கும் வகையிலும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை 2012-13-ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

கணினி இயக்க தெரியாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி தர கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விவரங்களை, கணினியில் பதிவேற்ற ஆசிரியர்கள் திணறுவதால், அவர்களுக்கு மீண்டும் கணினி பயிற்சி அளிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் சரியான எண்ணிக்கை தெரியா மல், கல்வித் திட்டங்களை வடிவமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு மாணவர், எந்த வகுப்புகளில் படிக்கின்றனர் என்ற தெளிவான விவரங்கள் கல்வித்துறையில் இல்லை.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு கப்பற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் பணி

இந்திய கப்பற்படையில் இலவச நான்கு வருட பி.டெக் படிப்புடன் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2 (B.Tech) Cadet Entry Scheme-ல் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 முடித்த திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படுவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கப்பற்படை அகாடமியில் 2016 ஜனவரி மாதம் பயிற்சி ஆரம்பமாகும்.
ஆள்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: 10+2 (10+2 (B.Tech) Cadet Entry Scheme
வயதுவரம்பு: 17-191/2-க்குள் இருக்க வேண்டும்.

CCE - E-Register for CCE for I to IX Std lமுப்பருவ மதிப்பீட்டு முறை E-Register for CCE எனப்படும் Excel file வெளியீடு.

அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களுக்கு,
1 - 9  ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது. மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும், நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டினையும் அறிய முடியும்.

To Download CCE - 9th Std Tamil Medium Click Here...

To Download CCE -9th Std - English Medium Click Here...

To Download CCE -1 to 8th std -Tamil Medium Click Here...

thanks to kalvisms

மின் கட்டணம் இனி -புதிய முறை

மின் கணக்கீடு எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தும் முறை இப்போது உள்ளது. இதில் நுகர்வோரின் சிரமத்தை குறைக்க 'முன் வைப்பு தொகை' மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


பயன்பாட்டுக்கு ஏற்ப முன்வைப்பு தொகை செலுத்தலாம். அத் தொகையில் இருந்து இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் வரவு வைக்கப்படும். வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வழங்கப்படும்.
கட்டணம், தொகை இருப்பு குறித்து நுகர்வோருக்கு அலைபேசியில் தகவல் அனுப்பப்படும்.

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம்

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளது.

4,362 காலியிடங்கள்
அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 

அரசு தேர்வுத்துறை நடத்திய இந்தத் தேர்வை7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டுக்கான ஆரம்பநிலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில்

ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்: தலைமை ஆசிரியை–4 ஆசிரியர்கள் இடமாற்றம்


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 6 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக திருச்சியை சேர்ந்த காயத்திரி ஈஸ்வரி பணியாற்றினார். 


       இப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் குட்டியப்பட்டியை சேர்ந்த இளையராஜா (வயது 35). இவர் கடந்த 2–ந்தேதி பள்ளியில் தூக்க மாத்திரை தின்று மயங்கி விழுந்தார். அவரை சக ஆசிரியர்கள் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

2013-ம் ஆண்டு ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை ஆசிரியர்களைஉடனடியாக நியமனம் செய்ய வேண்டும்!


பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில், 2013-ம் ஆண்டு ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.சி.ஏ.) சென்னை தலைமைச் செயலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கான669 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்த திருமதி.அமுதவள்ளி அவர்களை இணை இயக்குனர் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பி.இ., - பி.டெக்., படிப்புக்கு 'ஆன் - லைன்' அனுமதியில்லை

இன்ஜி., மற்றும் பி.டெக்., படிப்பில், எந்த பல்கலைக்கும் திறந்தவெளி மற்றும், 'ஆன் - லைன்' கல்லுாரி நடத்த அனுமதிக்கவில்லை என்று, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றக் கூடாது என்றும் எச்சரித்து உள்ளது.