Breaking News

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.இந்தத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிட்டது. அதன் பிறகு, பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு இந்தப் பட்டியல் அண்மையில் அனுப்பப்பட்டது.


இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அடுத்தவாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவித்தன. 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன.போட்டித் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.போட்டித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண்ஆகியவற்றின் அடிப்படையில் 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் இப்போது மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு


வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் கலக்கம் அடைந்தனர். மார்ச் 28–ந்தேதி சனிக்கிழமை ராம நவமி விடுமுறை, 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை 30–ந்தேதி திங்கட்கிழமை செயல்படும். 

31–ந்தேதி செவ்வாய்க்கிழமை நடப்பு நிதியாண்டிற்கான இறுதி நாள் என்பதால் விடுமுறை எனவும், ஏப்ரல் 1–ந்தேதி அடுத்த நிதியாண்டிற்கான முதல் நாள் என்பதால் கணக்குகளை தொடங்கும் பணிகளை மேற்கொள்வதால் அன்று விடுமுறை எனவும் தகவல் பரவியது.ஏப்ரல் 2–ந்தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி வங்கி விடுமுறை. 3–ந்தேதி புனித வெள்ளி விடுமுறை. 4–ந்தேதி வங்கி அரை நாள் மட்டும் செயல்படும். 5–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என 7 நாட்கள் வங்கி பணிகள் முடங்கும் என்று தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து அகில இந்திய வங்கி கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:–தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்திற்கும் 3 நாட்கள் மட்டும்

மாணவர்களுக்கு கல்வி நிதி -ஆதார் அட்டை தேவை இல்லை- மத்திய அரசு தகவல்...



பயிற்சி நாட்களில் ஆசிரியர்களுக்கு விடுப்பு: அரசாணை வெளியீடு - தினமலர்


தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்சி நாட்களுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின், 'அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில், ஆண்டுக்கு, 10 நாட்கள் பயிற்சி தரப்படுகிறது. இதையும் சேர்த்து, 220 நாட்கள் பணி நாட்களாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பயிற்சி நாட்களுக்கு, ஈடுசெய்ய விடுப்பு தருவதில்லை என்று, ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், பயிற்சிக்கு வர பல ஆசிரியர்கள் தயங்கினர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், அரசுக்கு மனு அளித்தனர். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இது தொடர்பாக, நேற்று வெளியிட்ட அரசாணையில்,'220 பணி நாட்களில், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, முடிந்த அளவுக்கு பணி நாட்களில் ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல், பயிற்சி நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டால், அதற்கு, 10 நாட்களில், ஈட்டு விடுப்பு எடுக்க அனுமதிக்கலாம்' என கூறப்பட்டுள்ளது.

ரூ-5 ஆயிரம் கோடி எங்கே போச்சு -புதிய பென்ஷன் திட்டத்தில் 'பகீர் '


ஓட்டை, உடைசல் பள்ளிகள் கணக்கெடுப்பு?


பல்வேறு அரசு பள்ளிகளின் கட்டட விபத்துகளை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், ஓட்டை, உடைசலாக, பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்க, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரே வாரத்தில், தமிழகத்தில், மூன்று அரசு பள்ளிகளின் சுவர் இடிந்து விழுந்து, விபத்துகள் நிகழ்ந்துள்ளன.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில், எம்.புதுப்பட்டியில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்த விபத்தில், ஐந்து மாணவ, மாணவியர்காயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில், வட அகரம் பகுதியில், பஞ்சாயத்து யூனியன் பள்ளியில், அலங்கார வளைவு சுவர் இடிந்ததில், ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியானான்.சென்னை, பெருங்குடியில் அரசு தொடக்கப் பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது. அப்போது மாணவ, மாணவியர் வகுப்பறையில் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.இந்த தொடர் விபத்துகளால், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

குரூப் 2: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு


குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்ப நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
(டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த 2013-14-ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தொகுதியில் 1,130 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5,635 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 26-ஆம் தேதி முதல் மே 8-ஆம் தேதி வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான கடிதம்அஞ்சல் மூலம் அனுப்பப்பட உள்ளது. அழைப்புக்கான விவரம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - பள்ளிக்கட்டிடங்களில் உள்ள பழுதுகளை தலைமை ஆசிரியர்கள் SSA நிதியிலிருந்தோ உள்ளாட்சி அமைப்புகளின் துணைக்கொண்டோ உடனடியாக சரி செய்ய வேண்டும் - இயக்குனர் உத்தரவு



இடையில் மாற்றம்செய்வதை அனுமதிக்க முடியாது- தேர்வுமுறை விஷயத்தில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு


ஒரு கல்வியாண்டில் எந்த தேர்வுமுறை அடிப்படையில் மாணவர்கள் சேர்கின்றனரோ, அதே முறையை கடைசிவரை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். இடையில் மாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது. மனுதாரரை புதிய முறையில் தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் எம்.டி.எஸ்., தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும், என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி அஞ்சனா எஸ்.நாயர் தாக்கல் செய்த மனு: குலசேகரம் அருகே படநிலம் ஸ்ரீமூகாம்பிகா பல் மருத்துவக் கல்லுாரியில் 2011 ல் முதுகலை எம்.டி.எஸ்., படிப்பில் சேர்ந்தேன். அந்தநேரத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் அதில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறும் முறை இருந்தது.

அதன்படி முதலாம் ஆண்டு தேர்வு எழுதினேன். இரண்டாம் ஆண்டில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒரு பருவத்தில் குறிப்பிட்ட பாடத்தில் தோல்வியடைந்தால் அனைத்துப் பாடங்களிலும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். நான் தோல்வியடைந்த பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.

மூன்றாவது ஊக்கத் தொகை கோரும் ஆசிரியர் - பரிசிலிக்க நீதி மன்றம் உத்தரவு



நாளை 19.3.15 ஃதமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு:249 கைதிகள் எழுதுகின்றனர்


தமிழகம் முழுவதும், 249 சிறைக் கைதிகள், நாளை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை புழல் சிறையில், 80 பேரும், மதுரை சிறையில், 99 பேரும், கோவை சிறையில், 70 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.வேலுார் மத்திய சிறை கைதிகள், 11 பேர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக, இன்று மாலை, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

தேர்வு முடியும் வரை, அங்கேயே தங்குவதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருப்பதாக, சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த கல்வி ஆண்டில் நடந்த CRC நாட்கள்



06.09.2014
22.11.2014
13.12.2014
06.12.2014 03.01.2015
28.02.2015
14.03.2015.
இதில் 6.9.14 CRC மட்டும் ஆறுமாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டதால் அந்த நாளை அனுபவிக்க இயலாது. மீதம் உள்ள 6 நாட்களையும் ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம்.

நிபந்தனைகளுடுன் CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை


CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை

PFRDA - CPS - GUIDELINES FOR WITHDRAWAL OF 25 % OF ACCUMULATED CONTRIBUTIONS BY NPS SUBSCRIBERS CLICK HERE... 

Pension Fund Regulatory & Development Authority எனப்படும் PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது

நிபந்தனைகள்:

1) தேவைகள்

a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு

b) குழந்தைகளின் திருமணம்

c) வீடு கட்டுவதற்கு (ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்கள் இது பொருந்தாது)


d) கீழ் கண்ட ஏதாவது ஒரு மருத்துவ செலவு நமக்கோ அல்லது நமது குடும்பத்தினர்க்கு (மனைவி அல்லது குழந்தை) ஏற்படும் பொழுது.

ஆதார்’ அட்டை இல்லாததற்காக, யாருக்கும் சலுகைகளை மறுக்கக்கூடாது.

ஆதார்’ அட்டை இல்லாததற்காக, யாருக்கும் சலுகைகளை மறுக்கக்கூடாது. ஆதாரை கட்டாயம் ஆக்கக்கூடாது என்ற எங்களது முந்தைய உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கட்டாயம் அல்ல

‘ஆதார்’ அட்டை கட்டாயம் என்று சில அரசுத்துறைகள் அறிவித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘ஆதார் அட்டை கட்டாயம் அல்ல. ஆதார் அட்டை இல்லாததற்காக யாரும் பாதிப்படைய விடக்கூடாது’ என்று கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 23–ந் தேதி உத்தரவிட்டது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் ஆசிரியரே பொறுப்பு என்று அறிவிப்பு


பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி நேற்று தொடங்கியது. மதிப்பீடு செய்வதில்தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. தேர்வு ஏப்ரல் 19-ந்தேதி முடிவடைகிறது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி விடைத்தாளை விரைவாக மதிப்பீடு செய்து, அதே நேரத்தில் எந்தவித பிரச்சினையும் இன்றி, சரியான முறையில் தேர்வு முடிவை வெளியிடவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசு தேர்வுத்துறை

மே முதல் வாரத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவு ?


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 5–ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.மார்ச் 31–ந்தேதி வரை நடக்கும் இந்த தேர்வை 8 லட்சத்து 45 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதி வருகின்றனர். 

தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்கள் மற்றும் சில பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.நாளை மறுநாள் (புதன்கிழமை) கணித தேர்வு நடக்கிறது. தேர்வுகளில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்வு ஒரு பிறம் நடைபெற்று வந்தாலும் கூட விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கி விட்டன.

பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு

பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்கள்: கல்வித்துறை


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர் என கல்வித்துறை அறிவித்துள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது; வரும் 19ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இத்தேர்வை நடத்துவது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.

கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடப்பதால், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (மார்ச் 16) தொடங்கப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திருத்துகின்றனர்.

அதன்பிறகு, ஆசிரியர்கள் புதன்கிழமை முதல் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. இத் தேர்வை 2,377 மையங்களில் தனித்தேர்வர்கள் 42 ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 8.86 லட்சம் பேர் எழுதி வருகின்றனர்.
மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்கள்: கல்வித்துறை


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர் என கல்வித்துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது; வரும் 19ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.
இத்தேர்வை நடத்துவது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடப்பதால்,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர்.பிளஸ் 2 தேர்வுக்கு இடையே, 10ம் வகுப்பு தேர்வும் நடக்க உள்ளது. எவ்விதகுழப்பத்துக்கும் இடமளிக்காத வகையில், தேர்வு மையங்களில் 2 பொதுத்தேர்வுகளுக்கும், தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து பயன்படுத்த வேண்டும்.பிளஸ் 2 தேர்வை போன்றே, இத்தேர்வுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது

பேனா மூடியை விழுங்கியதால் வகுப்பறையில் துடி துடித்து உயிரிழந்த 1-ம் வகுப்பு மாணவன்

திருப்பூர்: வகுப்பறையில் விளையாடிய போது விசிலடிக்க பயன்படுத்தப்பட்ட பேனா மூடியை எதிர்பாராத விதமாக விழுங்கிய சிறுவன் பள்ளியிலேயே துடி துடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி முத்துச்செட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது...
தாமஸ்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் மகன் நவநீதன் ஜோசப் 1-ம் வகுப்பு படித்து இவன் சக மாணவர்களுடன் வகுப்பறையில் விசிலடித்து விளையாடி கொண்டிருந்த போது திடீரென துடி துடித்து மயங்கி விழுந்தான்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியை உடனடியாக மாணவனை அவினாசி அரசு மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து கதறி அழுதபடியே மருத்துவ மனைக்கு வந்த மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினருடன் தகராறில் ஈடுபட்டனர்.
Like ·  · 

சாத்துார் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஐ.நா.,வில் பேச்சு - ஆசிய கண்டத்தில் இருந்து சென்ற ஒரே பெண் ஆசிரியை

சாத்துார்:- உலகளவில் ஆண் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது,”என, ஐ.நா., சபையில் நடந்த பெண்களின் நிலை குறித்த கருத்தரங்கில் பேசிய சாத்துார் பள்ளி ஆசிரியை ரமாதேவி தெரிவித்தார். விருதுநகர், சாத்துார் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஆர்.ரமாதேவி. அ.ராமலிங்காபுரம் ஊராட்சி பள்ளியில் பணிபுரிகிறார். ஐ.நா., சபையில் நடந்த 'பெண்களின் நிலை' குறித்த கருத்தரங்கில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பேசினார்.நேற்று மாலை ஊர் திரும்பிய அவர் கூறியதாவது:


உலக மகளிர்தினத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 20 தேதி வரை ஜ.நா., சபையில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடந்து வருகிறது. உலகளவில் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் தன்னார்வ அமைப்பு உறுப்பினர்களில் எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் பேச அழைத்தனர். ஆசிய கண்டத்தில் இருந்து சென்ற ஒரே பெண் ஆசிரியை நான்தான்.

அசத்தும் திண்டிவன ஆசிரியர்கள்- சொந்த செலவில் ஏற்பாடு செய்த ஆங்கில உச்சரிப்பு சார்பான கலந்துரையாடல் நிகழ்ச்சிஃமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நேரில் வந்து வாழ்த்து


அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் பணிவான வணக்கம். எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் குறைகூறும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் இதுபோன்ற ஆசிரியர்களும் பலர் உள்ளனர் என்று.