Breaking News
ஏப்ரல்15 முதல் சத்துணவு மையங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு:
தமிழக அரசின் ஏமாற்று போக்கை கண்டித்து, வரும் ஏப்., 15ம் தேதி முதல், காலவரையின்றி, அனைத்து சத்துணவு மையங்களையும் மூடி போராட்டம் நடத்தப்படும்,''என, தமிழ்நாடுசத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, 41,763 பள்ளி சத்துணவு மையங்களில்,80 லட்சம்மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு சத்துணவு வழங்க, மத்திய அரசு, தினமும், ஆறு ரூபாய் உணவுப்படி வழங்குகிறது.ஆனால், தமிழக அரசு, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, 1.70 ரூபாய், பள்ளி மாணவர்களுக்கு, 1.80 ரூபாய் வழங்குகிறது. இந்த பணத்தில் தான் அரிசி, பருப்பு தவிர மற்ற மளிகை சாமான்,
Labels:
பத்திரிக்கை செய்தி
'பேப்பர் சேசிங்' தில்லுமுல்லு இனி நடக்காது!:புதிய கட்டுப்பாடுகள் மூலம் தேர்வுத்துறை அதிரடி
இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. விடைத்தாள் களை, 'சேஸ்' செய்வதைத் தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.
முதற்கட்டமாக தமிழ், ஆங்கில மொழிப்பாடங்கள்; வரும், 21ம் தேதி முதல், முக்கியப் பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பல புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், எந்த மாவட்ட விடைத்தாள்கள் எந்த மாவட்டத்துக்கு செல்கிறது என்பதை, ஆசிரியர்களே அறிய முடியும். இது, முறைகேடுகளுக்கு வழி வகுத்தது. மேலும், மாவட்ட தலைநகரில்,
Labels:
பள்ளிக் கல்வி
ஒரே நேரத்தில் இரு படிப்பு; ஆசிரியர் பணி தர மறுப்பு பள்ளிகல்வித்துறை இயக்குநர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
ஒரே நேரத் தில் இரு படிப்பு படித்ததாக கூறி ஆசிரியர் பணிமறுக்கப்பட்டவரின் மனுவை பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை, விளாங்குடியை சேர்ந்த எஸ்.தேன்மொழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்செய்த மனு:
நான், பிஏ (ஆங்கிலம்), எம்ஏ (ஆங்கிலம்) மற்றும் பிஎட் முடித்துள்ளேன். கடந்த ஜன. 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை டிஆர்பிநடத்தியது. இதில் நான் கலந்து கொண்டேன். மாநில அளவில் 49வது இடம் பிடித்தேன். இதன்பிறகு பிப். 16ம் தேதி மதுரையில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டேன். சரிபார்ப்பின்போது 2008&10ம் ஆண்டில் எம்ஏ முடித்ததாகவும், இதே காலத்தில் பிஎட் முடித்துள்ளதாகவும் கூறிஎனக்கு பணி வழங்க மறுத்தனர்.ஆனால், நான் 2008&09ல் எம்ஏ முதலாமாண்டு தேர்ச்சி பெற்றேன். 2009&10ம் ஆண்டில் பிஎட் தேர்ச்சி பெற்றேன். இதன் பிறகே எம்ஏ இரண்டாமாண்டு படிப்பை 2010&11ல் முடித்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படிப்பை படிக்கவில்லை என்பதை அதிகாரிகளிடம் விளக்கினேன். இதற்கான சான்றுகளையும் தாக்கல் செய்தேன்.

COURT,
பள்ளிக் கல்வி
1,000 புதிய பள்ளிகள் துவக்கப்படும்
மாநிலம் முழுவதும், புதிதாக, 1,000 பள்ளிகள் துவங்கப்படுகிறது.
இது தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
* மாநிலம் முழுவதும், அரசுப் பள்ளிகளில், புதிய கட்டடங்கள் கட்டுதல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட, அடிப்படை கட்டடமைப்பு வசதிகளை ஏற்படுத்த, நடப்பு பட்ஜெட்டில், 110 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* கிராம பகுதிகளில் துவங்கப்பட்ட, 1,000 பள்ளிகள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், மேலும், 1,000 பள்ளிகள் துவங்கப்படும்.
Labels:
தொடக்க கல்வி
இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான முதல் கட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது.
சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவர்.
Labels:
பள்ளிக் கல்வி
6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்
தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அமலில் உள்ளதால், இந்தத் தேர்வுகள் மூன்றாம் பருவத் தேர்வுகளாக நடைபெற உள்ளன.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கியது. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளன.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்தும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மே முதல் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
Labels:
பள்ளிக் கல்வி
உ.தொ.க.அலுவலர்களும் கோரிக்கை வைத்தனர் .நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் தர ஊதியமான ரூ.4700 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதை மாற்றி தனி ஊதியம் வழங்கிடக் கோரி வழக்குத் தொடர உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் முடிவு
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் - சென்னை - 600 101. மாநில மையத்தின் செயற்குழுக் கூட்டம் 12.03.2015 பிற்பகல் மதுரையில் மாநிலத் தலைவர் திரு. மு. அய்யாச்சாமி, அவர்கள் தலைமையில், கெளரவத் தலைவர் திரு. அ. சுந்தரராஜன், அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் திரு. சி. செளந்தரராஜன், அவர்கள் அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்தார்.
மாநில பொருளர் திரு. அ. தம்பித்துரை, மாநில துணை தலைவர் திரு. கு. பால்ராஜ் அருள், மாநில துணைச் செயலர் திரு. ஜோசப் அண்டோரெக்ஸ், மாநில மகளிரணி திருமதி. ஈவ்லின் ஜெனட், மற்றும் 50 - க்கும் மேற்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாநில மையம், விவாதம் மேற்கொண்டு, பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் தர ஊதியமான ரூ.4700 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதை மாற்றி தனி ஊதியம் வழங்கிடக் கோரி வழக்குத் தொடர்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
Labels:
தொடக்க கல்வி
தமிழ்நாட்டுக்கு ஏதும் இல்லை:18 புதிய உயர் கல்வி நிலையங்களில் ஆந்திராவில் 7 நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும் புதிதாக 18 உயர் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவற்றில் ஆந்திராவில் மட்டும் 7 கல்வி நிறுவனங்கள் அமைய உள்ளன.
இந்த அறிவிப்பில் தமிழ் நாட்டுக்கு எந்தவொரு உயர் கல்வி நிறுவனமும் ஒதுக்கப்படவில்லை. மக்களவையில்,நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்படவுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

ஐந்தாம் வகுப்புவரை நன்றாக படித்த மாணவர்கள் 8ம் வகுப்பில் எப்படி பின்தங்கினர்?; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நடப்பு கல்வியாண்டில் நடந்த ஆய்வுத்தேர்வு மூலம், 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் தவிர, பிற பாடங்களில் பின்தங்கி இருப்பது
தெரியவந்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல், வாசித்தல் மற்றும் எழுதும் திறனை அளவிடும் வகையில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் மூலம் அடைவு ஆய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு, நடப்பு கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு ஜன., மாதம் நடந்தது. 3 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு,தமிழ், ஆங்கிலப் பாடங்களில், எழுதுதல் மற்றும் வாசித்தல் திறன், கணிதப்பாடத்தில் அடிப்படை கணக்கு குறித்த தேர்வும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதலாக, அறிவியல் பாடத்திலும் தேர்வு நடந்தது. மாணவர்களின் திறனை அளவிடும் நோக்கத்துக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.இதன் முடிவு, கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக, 3, 5 மற்றும் 8ம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்கு, தனித்தனியே சதவீத அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 0-40, 41-60, 61-80, 81-100 என்ற சதவீத அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், 3 மற்றும் 5ம் வகுப்புக்கான அளவிடுதல், பல மாவட்டங்களில் 80 சதவீதத்தை கடந்துள்ளது. அனைத்து மாவட்டத்திலும்,

வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில்,ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி
நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜாவிடுத்துள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்குஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி,பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று காலை 10:00மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள,ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வுநடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம்அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன்ஆஜராக வேண்டும். இவ்வாறு, சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.
Labels:
பள்ளிக் கல்வி
"நெட்' தேர்வு : விண்ணப்பிக்க மார்ச்.12 கடைசி
கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி
உதவித்தொகையைப் பெறுவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் “ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் - நெட்“ தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் : CPS திட்டத்தை கைவிடவேண்டும்; அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் மாண்புமிகு முதலமைச்சரிடம் நேரில் மனு
10.03.2015 அன்று அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு .ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அவர்களின் வீட்டில் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. செ.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் சந்தித்தார்கள். அப்போது தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கவேண்டும் எனவும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் CPS ஓய்வுதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வுதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் பிற சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை எனவும் மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளிக்கப்பட்டது.
Labels:
ASSOCIATION NEWS
பிளஸ் 2 தேர்வு முறைகேடு: 36 பேர் நேற்று சிக்கினர்
சென்னை: பிளஸ் 2 ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 36 பேர் பிடிபட்டனர். இதில், பள்ளி மாணவர்கள், 12 பேர். அதேநேரம், ஆங்கிலம் முதல் தாள் ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிமையாகவும், தமிழ் வழி மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமாகவும் இருந்தது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று, ஆங்கிலம் முதல் தாளுக்கு தேர்வு நடந்தது. ஏழு பக்கங்கள் அடங்கிய வினாத்தாளில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 'ஆப்ஷனல்' வினா உட்பட மொத்தம், 69 கேள்விகள் இருந்தன. முதல் தாளில், பெரும்பாலானவை ஆங்கில இலக்கணம் தொடர்பான கேள்விகள். நூறு வார்த்தைகளுக்கு, ஒரு பத்தி எழுதும் திறன் குறித்த வினாவில், 'சத்தியாகிரகப் போராட்டத்தில் பெண்களை காந்திஜி எந்த அளவுக்கு ஈடுபடுத்தினார்?' என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது.
வினாத்தாள் குறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது: ஆங்கிலக் கவிதை குறித்த வினா, இலக்கணம் தொடர்பான வினாக்கள், தமிழ் வழி மாணவ, மாணவியருக்கு கடினமாக இருந்தன; ஆங்கில வழி மாணவ, மாணவியருக்கு எளிதாக இருந்தன. மொழி மாற்றம் குறித்த வினா, அனைவருக்கும் எளிமையாக இருந்தது. இவ்வாறு கூறினர். நேற்று, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 36 தேர்வர்கள் சிக்கினர். அதில், 12 பேர் பள்ளி மாணவர்கள்; மற்றவர்கள் தனித்தேர்வர்கள்.
Labels:
பள்ளிக் கல்வி
Subscribe to:
Posts (Atom)