ஆசிரியர்கள், அதிகாரிகளின் 'ஈகோ' பிரச்னையால் 900 பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பமுடியவில்லை.அரசு பள்ளி பட்டதாரி
உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
நேரடி முதுநிலை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
அல்லது மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
பதவி உயர்வு
பட்டதாரி ஆசிரியராகஇருந்து, முதுநிலைபதவி உயர்வு பெற்றவர்கள், உயர்நிலை
பள்ளி தலைமை ஆசிரியராக வர முடியாது என்ற விதி, பல
ஆண்டுகளாகபின்பற்றப்பட்டது.ஆனால், 2008ல், இந்த விதிக்கு மாறாக, முதுநிலை
ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.இதை
எதிர்த்து,பதவி உயர்வு பெற்றபட்டதாரி ஆசிரியர்மற்றும் தமிழாசிரியர்கழகம்,
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், 'பதவி உயர்வு பெற்று, ஐந்து ஆண்டுகளை தாண்டிய முதுநிலை ஆசிரியர்களுக்கு, உயர்
நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி வழங்கக் கூடாது' என, உயர் நீதிமன்றம் தடை
விதித்தது.மேலும், இந்த பிரச்னையில் இறுதி முடிவு எடுக்க, மூன்று
நீதிபதிகள்
அடங்கிய அமர்வுவிசாரணை நடத்தவும், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், காலியாக உள்ள, 900 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
இடங்களை நிரப்ப, 3,000 பேர் இடம் பெற்ற, தோராய பட்டியலை, கடந்த மாதம், பள்ளிக்கல்வி இயக்குனரகம்தயாரித்தது.
அதில், முதுநிலை ஆசிரியர்கள், 2,000க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றனர்.
அதற்கு, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு
தெரிவித்தது.எனவே, மீண்டும் பதவி உயர்வு பிரச்னை, உயர் நீதிமன்றத்திற்கு
சென்றது. தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தயாரித்த பட்டியலுக்கு,
நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், பதவி உயர்வு நடவடிக்கை மீண்டும்
கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
தன்னிச்சையான முடிவுஇது குறித்து, பதவி உயர்வு பெற்ற, பட்டதாரிஆசிரியர்
மற்றும்தமிழாசிரியர் கழகம் சிறப்புதலைவர், அண்ணாமலை கூறியதாவது:அரசின்
பணியாளர்
விதிகளின்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே, உயர்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியராக, நேரடி பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஆனால், ஒரு முறை பதவி உயர்வு
பெற்ற, முதுநிலை ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க,
பள்ளிக்கல்வி இயக்குனரகம் முயற்சிக்கிறது.முதுநிலை பதவி உயர்வு பெற்று,
ஐந்து ஆண்டுகளைதாண்டியவர்களுக்கும், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தர,
அவர்களின் பெயர்கள் பட்டியலில்சேர்க்கப்படுகின்றன.இது,
விதிகளுக்குமுரணானது. விதிப்படி பதவி உயர்வு வழங்க, உயர் நீதிமன்றம்
உத்தரவிட்ட பின்னும், பள்ளிக்கல்வித் துறை மவுனமாக உள்ளது.அதிகாரிகளின்
தன்னிச்சையான முடிவுகளால், 900 உயர்நிலைப் பள்ளிகளில், தலைமைஆசிரியர்களை
நியமிக்கமுடியவில்லை. அதனால்,நிர்வாகப் பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டு
உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்