Breaking News

தமிழகத்தில் உள்ள தபால் துறையில் காலியாக இருக்கும் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களை தபால் துறை அறிவித்துள்ளது.


310 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 என்ற சம்பள விகிதத்தை இந்த பணியிடங்கள் கொண்டுள்ளன.

தகுதிகள் 
கல்வி: இரண்டு பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 
வயது: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும். 


பிற குறிப்புகள் 
* இந்த பணியிடங்கள் 2 ஆண்டு புரொபேஷன் காலத்தை கொண்டுள்ளன. 3 ஆண்டு பணி அனுபவத்திற்கு பின், துறை தேர்வு எழுதி பணியில் பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை
* இந்த பணியிடங்களுக்கான கட்டணம் ரூ. 100. அனைத்து பிரிவினரும் இதை செலுத்த வேண்டும். 
* தேர்வு கட்டணம் ரூ 400. எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. 
* இ-பேமண்ட் வசதி உள்ள தபால் அலுவலகங்களில் இதை பணமாக செலுத்திட வேண்டும் 15.11.2016க்குள் இது செலுத்தப் பட்டிருக்க வேண்டும். 
* ஒருவர் ஒரு தபால் வட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட் போட்டோ, கையெழுத்து ஆகியவற்றை ஸ்கேன் செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 
* ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் இவை அவசியம். 
* முதலில் ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு பின்பு தபால் அலுவலகத்தில் பணமாக கட்டணத்தை செலுத்திய பின்பு அந்த தகவல்களை ஆன்லைனில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். 
* கட்டணம் செலுத்தி அவற்றை ஆன்லைனில் பதிவு செய்த 48 மணி நேரத்திற்குப் பின்பு விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து கொள்ளலாம். 2016 நவ., 15 வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: 
* நான்கு பகுதிகள் கொண்ட எழுத்துத் தேர்வாக போட்டி தேர்வு நடத்தப்படும். 
* பொது அறிவு 25 மதிப்பெண்களுக்கு, கணிதம் 25 மதிப்பெண்களுக்கு, ஆங்கிலம் 25 மதிப்பெண்களுக்கு மற்றும் தமிழ் 25 மதிப்பெண்களுக்கு என எழுத்துத் தேர்வு நடத்தப்படும். 
* முதல் 2 பகுதிகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடத்தப்படும்.
* இரண்டு மணி நேர கால அளவை கொண்டது இந்தத் தேர்வு. 
* பொதுப் பிரிவினர் ஒவ்வொரு பகுதியிலும் 10 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம். ஓ.பி.சி., பிரிவினர் 9 மதிப்பெண்கள் பெற வேண்டும். எஸ்.சி., 
எஸ்.டி., பிரிவினர் 8 மதிப்பெண்கள் பெற வேண்டும். 
* இந்தத் தேர்வானது சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.
* ஜாதி சான்றிதழ் பெறும் படிவம் மற்றும் முழு விபரங்களை துறையின் இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளவும்.