Breaking News

துாரம் அதிகமுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துவிடுவார்களோ என பகுதி நேர ஆசிரியர்கள் கலக்கம்


திண்டுக்கல்: நுாறுக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால் கலக்கமடைந்துள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்புகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவுகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தற்போது 6 முதல் 8 ம் வகுப்பு வரை 100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கிட வேண்டும்.
அப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 170 உபரி பணியிடங்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்களை பணிநிரவல் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. துாரம் அதிகமுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துவிடுவார்களோ என்று பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சங்க செயலாளர் குமார் கூறியதாவது: ஏற்கனவே குறைவான ஊதியத்தில் பணிபுரிகிறோம். அதிக துாரம் உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தால் பயண செலவு அதிகரிக்கும். துாரத்தை கணக்கிட்டு பணியிடம் வழங்க வேண்டும், என்றார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “முடிந்தவரை பகுதிநேர ஆசிரியர்களை துாரம் குறைந்த பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

இனி 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை


மாதந்தோறும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 இந்த நடைமுறையானது, அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க (ஏஐபிஈஏ) பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம், தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய நடைமுறை தொடர்பான அறிவிக்கை, விரைவில் வெளியாகும். 
 இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதனால், வங்கி ஊழியர்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைவதுடன், அவர்களின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன் என்றார் வெங்கடாசலம்.
 தற்போது, பொதுத் துறை, தனியார் துறை வங்கிகள் சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகின்றன.

10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் 'ஆல் பாஸ்' திட்டம்


கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டத்தை, பல நிபந்தனைகளுடன், 10ம் வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்கி விடாமல், அவர்களை, 'பாஸ்' செய்து, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த அடிப்படையில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது.

ஆனால், இந்த திட்டத்தின்படி, 'அனைவருக்கும் கட்டாய பள்ளிக்கல்வி வேண்டும் என்ற நோக்கம் சரியாக நிறைவேறவில்லை' என, புகார் எழுந்தது. அதனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சார்பில், துணை குழு அமைக்கப்பட்டு, பல மாநிலங்களில் ஆய்வு நடந்தது.
ஆலோசனை கூட்டம்

மாணவர்களிடம் ஆதார் எண் கேட்காதீர் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


விருதுநகர்: கல்வி உதவித்தொகை பெற மாணவர்களிடம் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான உதவித்தொகை, 9ம் வகுப்பு எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு மாணவிகளுக்கான உதவித்தொகை, தேசிய வருவாய் திறன்வழித்தேர்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை என மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

அதற்கு மாணவர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கான புகைப்படம் எடுத்துவருகின்றனர். இந்நிலையில் ரேஷன், காஸ்,மண்ணெண்ணெய் வினியோகம் தவிர்த்து பிற அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

பள்ளிக்கல்வி - மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க தலைமையாசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


கடல், குளத்தில் குளிக்கக்கூடாது என மாணவர்களை அறிவுறுத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம்

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.



* பள்ளிக்கூட நேரம் முடிந்ததும் மாணவ-மாணவிகள் நேராக வீட்டுக்கு செல்லவேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துதல்.
* கடல், குளத்தில் மாணவர்கள் குளிக்கக்கூடாது
* கடல், ஏரி, குளம், குட்டை ஆகிய எந்த நீர் நிலைகளிலும் மாணவ-மாணவிகளை குளிக்கக்கூடாது என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தவேண்டும்.

மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய போட்டி: பரிசு ஜப்பான் பயணம், லேப்டாப், ரூ.15 லட்சம் - இயக்குநர் செயல்முறைகள்


ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களை நியமித்தது தெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை 3 ஆசிரியர் பணியிடங்கள், 9 முதல் 10 ம் வகுப்பு 5 ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும்.

அதன்பின் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சென்ற ஆண்டு செப்., 26 ல் பணி நியமனம் வழங்கப்பட்டன. இதில் ஒரே காலியிடத்திற்கு பல பேரை நியமித்துள்ளனர். பணியில் சேர்ந்த அனைவருக்கும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டதால், முறைகேடு பணிநியமனம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.

8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்றசட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுகள் கோரிக்கை

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. 8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும், 10ம் வகுப்புக்கு வாரியத் தேர்வு நடத்தவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைத்தன.

அதை, எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டார

10ம் வகுப்பு தேர்வு:மறுகூட்டல் முடிவு

பத்தாம் வகுப்பு உடனடி சிறப்பு துணைத்தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகிறது.தமிழகத்தில், 10ம் வகுப்பு உடனடி சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள், ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் முடிந்து, மதிப்பெண் விவரம் மற்றும் பதிவெண் பட்டியல் தயாராக உள்ளது.

இந்த விவரங்களை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், இன்று காலை, 10:00 மணிக்கு, www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடுகிறது. 'பட்டியலில் இடம்பெறாத, பதிவெண்களுக்கான விடைத்தாள்களில், மறுகூட்டலில், எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை' என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை:மத்திய அரசு அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு, ஆதார் எண்ணுடன் கூடிய, லேமினேஷன் செய்யப்பட்ட தரமான அடையாள அட்டை வழங்க, அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்கள் வகித்த பதவி, அவர்களின் பணிக்காலம் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஓய்வூதியதாரர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கென தனி அடையாள அட்டை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின் TIN எண் அல்லது அவரது குடும்பத்தினருக்கு அல்லது குடும்ப உறுப்பினர் எவருக்கேனும் வழங்கப்பட்டுள்ள TIN எண் சார்ந்த விவரங்களை மாணவர்களிடமிருந்து பெற்று பள்ளிவாரியாக தொகுப்பறிக்கை அனுப்புதல் சார்பு


மார்ஷ்மெல்லோ' – புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்பு வெளியீடு!

Image result for marshmallow android versionஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்புகளுக்கு லாலிபாப் (5.0 – 5.1), கிட்கேட் (4.4), ஜெல்லி பீன் (4.1 – 4.3), ஐஸ் க்ரீம் சான்ட்விச் (4.0) என்று இனிப்பு வகைகளாகப் பெயரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட் வெர்சன் ஆண்ட்ராய்டு M (6.0)க்கு MARSHMALLOW என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த புதிய இயங்குதளத்திற்கு MANGO LASSI, MOON PIE, MILK SHAKE உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தன. இந்நிலையில் நேற்று ஆண்ட்ராய்டு பொறியியல் துறை துணைத் தலைவர் டேவ் பர்க் (DAVE BURKE) தனது டுவிட்டர் பக்கத்தில் மார்ஷ்மெல்லோ என்ற பெயரையும் புகைப்படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏழாவது ஊதியக் குழுவின் உங்கள் ஊதியம்

ஏமாற்றம் அளிக்கப் போகிறதா ஏழாவது ஊதியம் குழு?

மத்திய நிதி அமைச்சரின் பாராளுமன்ற உரை வெறும் 15% ஊதிய உயர்வைத்தான்  சுட்டிக்காட்டுகிறது  என்பது போலவே உள்ளது .அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தமிழக அரசு  அதை அமுல்படுத்த ஓர் குழு அமைத்து மேலும் ஊதியத்தை திருத்தி அமைத்தால் அடுத்த 10 ஆண்டகளுக்கு அரசு ஊழியர்களுக்கு இது ஒரு பெருத்த அடியாகவே விழும்என்பதில் ஐயமில்லை.


Honourable Finance Minister Shri.Arun Jaitely had spoken about the possible impact of 7th CPC recommendations in Parliament.

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

Allahabad HC orders UP officials, politicians to send their kids to government primary schools

The Allahabad high court on Tuesday took a serious note of the pathetic condition of primary schools in the state and directed the chief secretary to ensure that children/wards of government officials/servants, those serving in the local bodies, representatives of people and judiciary, etc., send their wards to these schools.

"Only then would they be serious enough to look into the requirements of these schools and ensure that they are run in good condition," the court observed.
Hearing a slew of writ petitions filed by Umesh Kumar Singh and several others, Justice Sudhir Agarwal directed the chief secretary to take steps within six months so as to make the aforesaid directions effective from the next academic session of primary schools.

குரூப் - 2 பதவிகளுக்கு24ம் தேதி கலந்தாய்வு

சென்னை:'குரூப் - 2 நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,222 பேருக்கு, வரும், 24ம் தேதி முதல் கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:குரூப் -- 2 நேர்முக தேர்வு பதவிகளில், 1,136 காலியிடங்களை நிரப்ப, முதன்மை எழுத்துத் தேர்வு, 2014 நவ., 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 2,222 பேருக்கு, ஜூலை 15ம் தேதி முதல், ஆக., 8ம் தேதி வரை, நேர்காணல் நடந்தது; அதில் தேர்வானவர் விவரங்கள், ஆக., 10ம் தேதி வெளியிடப்பட்டன. நேர்காணலில் பங்கேற்ற, 2,222 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க, தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு, ஆக., 24ம் தேதி முதல், செப்., 1ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் நடக்கும்.

SLAS TEST - வரும் அக்டோபர் மாதம் நடைபெறும்


மாநிலம் முழுதும் மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளுக்குரிய கற்றல் அடைவுகளை சோதித்தறியும் SLAS தேர்வு வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.அதற்கான பணிமனை 17.08.2015 முதல் 21.08.2015 வரை சென்னை DPI வளாகத்தில் நடைபெற்று வருகிறது..

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி: ஆக.24 முதல் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 


குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இப்பதவிகளுக்கான நேர்காணல் கடந்த ஜூலையில் நடந்தது. இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பள்ளியில் மாணவர்கள் மோதல்; 17 பேர் காயம்; சாலை மறியல்- போலீஸ் தடியடி

கடலூர் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், இரு ஆசிரியர்கள் உள்பட 17 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இப்பள்ளியில் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.

பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கல்வித்தரத்தை அதிகரிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அதிக நிதியை பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார். இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு அரசு அளிக்கும் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா கல்வி பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்கச்செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்
த.சபீதா அனைத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கலாந்தாய்வில் முறைகேட்டை தட்டிக்கேட்ட ஆசிரியரை முகத்தில் குத்திய அதிகாரி


தசிவகங்கை:  முறைகேட்டை தட்டிக் கேட்டததால் ஆத்திரமடைந்த கல்வித்துறை அலுவலர், ஆசிரியரை தாக்கினார். சிவகங்கை  மருதுபாண்டியர் நகரில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வளாகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலாந்தாய்வு  நேற்று  நடந்தது. அதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், காளையார்கோவில், மானாமதுரை,  இளையான்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலி பணியிடங்கள்  மறைக்கப்படுவது குறித்து கல்வித்துறை அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர்.  இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின்படியே கலந்தாய்வு நடப்பதாக அலுவலர்கள் பதிலளித்தனர்.
இதனால் ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முறைகேட்டை தட்டிக் கேட்ட   தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சக்திவேலை, கல்வித்துறை அலுவலக எழுத்தர் கலைமணி திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அதிகாரிகளை, ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். 

தொடக்க கல்வி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு என புகார்: காலியிடம் மறைத்தது ஏன்? ஆசிரியர்கள் போராட்டம்




வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் நடக்கிறது என்று கூறி ஆசிரியர்கள் உள்ளிருப்பு ேபாராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. 

கலந்தாய்வு: ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பு


காஞ்சிபுரத்தில் நடந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி, ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.
காஞ்சிபுரத்தில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல், பணி நிரவல் கலந்தாய்வு கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு காஞ்சிபுரம் கா.மு. சுப்புராயன் முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடக்கக் கல்வித் துறை உதவி இயக்குநர் உமா, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர்.