Breaking News

பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்.



 

50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு:


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.
ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மற்றும் கருணை அடிப்படையிலும் பணி நியமனம் நடைபெறுகிறது.

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்


இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without
books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).

2015- துறைத்தேர்வுக்கு அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்


அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்



ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக விவேக்ரே, ரத்தின்ராய், செயலாளராக மீனாஅகர்வால் நியமிக்கப்பட்டனர்.
புதிய அரசு அமைந்தபின், இக்குழு அலுவல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த அலுவலர் குழுவில், 4 சார்பு செயலர்கள், ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம் அனாலிஸ்ட், 3 செக்ஷன் ஆபீசர்கள், ஒரு உதவியாளர், 6 தனிச்செயலர்கள், 5 ஸ்டெனோ கிராபர்கள், 3 டிரைவர்கள், ஒரு அலுவலக உதவியாளர் என 24 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அலுவலர்களை பிற துறைகளில் இருந்து நியமிக்க, மத்திய பணியாளர் துறையிடம் விபரம் கேட்டுள்ளனர். இந்த நியமனத்திற்குப் பின், 18 மாதங்கள் ஏழாவது ஊதியக்குழு செயல்படும்.

மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்த முடிவு


ஜாக்டோ ஆசிரியர் குழுவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களும், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 28 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இவர்கள் வரும், 8ம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில், பேரணி நடத்த உள்ளனர். இந்நிலையில், மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகமும் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. மார்ச், 12ம் தேதி சென்னையில், 2,500 தொழிற்கல்வி ஆசிரியர்கள், கோட்டை நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க உள்ளனர்.

நாளை(மார்ச் 5) பிளஸ் 2 பொதுத்தேர்வு: முறைகேடுகளைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(மார்ச் 5), பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் இத்தேர்வில், முறைகேடுகளைத் தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்கி, வரும் 31ம் தேதி முடிகிறது.

* நாளை, தமிழ் முதல் தாள், நாளை மறுநாள், தமிழ் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடக்கிறது.

* மொத்தம், 6,256 பள்ளிகளில், 2,377 மையங்களில், 3.91 லட்சம் மாணவர்களும், 4.52 லட்சம் மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர்; தனித் தேர்வர்கள், 43,000 பேர். புதுச்சேரியில், 14,000க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுகின்றனர்.

தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டில் பயிலும் பார்வையற்ற குழ்ந்தைகளுக்கு கற்றலை எளிதாக்க சிறப்பு உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிகளின் பெயர் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளி கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு


பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் எம்.ராஜா, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள், நேற்று தலைமை செயலகம் வந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணியை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான அரசு விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது, ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டு 6 மாதம் ஆகியும் இதுவரை ரூ.2 ஆயிரம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 7,569 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நிலை-2 பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். 53,640 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை 100 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற எண்ணிக்கை அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர்.

தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பான செயல்முறை

வலைதளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்வது சார்பான இயக்குனரின் உத்தரவு


MARCH DIARY 2015


>4-Maasi Maham (RL)

>5- 12th Public Exam Starts

>7-Teachers Grievance Day

>8-JACTO Mega Rally
International Women's/Literacy Day

Question Banks for 10th and 12th Examinations

எச்சரிக்கை- சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் ஆபத்து: விழிப்புணர்வு இல்லையெனில் விபரீதம்:

 

'பேஸ்புக்' கனவான்களே! இரவு பகல் பாராமல், ஸ்மார்ட்போன் துணையோடு, 'பேஸ்புக்'கில் மூழ்கியிருப்பவரா நீங்கள்? உங்கள் தனிப்பட்ட விவரங்களையும், குடும்ப புகைப்படங்களையும், 'அப்லோட்' செய்யும் ஆர்வக்கோளாறு கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு எந்நேரமும் ஆபத்து காத்திருக்கிறது.

இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முதன்மையானதாக இருப்பது, பேஸ்புக். பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகம் என, சமூகத்தில் யாவரும், எங்கும், கால நேரமின்றி கொண்டாடும் இந்த வலைதளம், புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும், மறந்துபோன தொடர்புகளை புதுப்பிக்கவும், பேருதவி புரிகிறது. ஆனால், அதன் மூலம் வரக்கூடிய பிரச்னைகள், மறைந்திருக்கும் ஆபத்து பற்றி, பலருக்கும் தெரிவதில்லை. நூதன 'ஹேக்கிங்' மற்றும் சூபிஷ்சிங்' முறைகளை பயன்படுத்தி, எப்பேர்ப்பட்டவரையும் கண்ணீர் விட்டு கதறி அழ வைக்கும் சக்தி கொண்ட வில்லன்கள், இணையத்தில் ஏராளம் பேர் இருக்கின்றனர்.

தமிழகத்தில் முதல் முறையாக தபால் அலுவலகத்தில் செல்லிடப்பேசி விற்பனை



தமிழக தபால் துறையில் முதல் முறையாக செல்லிடப்பேசி விற்பனை மதுரையில் திங்கள்கிழமை 02.03.15 தொடங்கியது.
தபால் சார்ந்த சேவைகள் தவிர பல்வேறு வணிக ரீதியிலான சேவைகளையும் தபால் துறை செய்து வருகிறது.

தற்போது செல்லிடப்பேசி விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதற்காக, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பான "பென்டா 301' என்ற செல்லிடப்பேசி தபால் நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஊரகப் பகுதி மக்களுக்கு குறைவான விலையில், நவீன வசதிகளுடன் கூடிய செல்லிடப்பேசியை விற்பனை செய்யும் நோக்கில் இத்திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்கிறது.

கணினி பயிற்றுநர் சான்றிதழ் சரிபார்ப்பு - 02/03/2015 அன்று கலந்து கொள்ளாதவர்களுக்கு 04/03/2015 அன்று மீண்டும் ஒரு வாய்ப்பு



CRC- குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல் என்ற தலைப்பில் 14/3/15 அன்று குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ளது



DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration - TNPSC - To be opened on 02 Mar 2015

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உண்ணாவிரதம்


புத்தகங்களே இல்லாத பாடங்களுக்கு போட்டி தேர்வு:கல்வித்துறை'தமாஷ்:' கலை ஆசிரியர்கள் அதிர்ச்சி


அரசுப் பள்ளிகளில், கலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்குபுத்தகங்களேதெரியாமல், பள்ளிக்கல்வித் துறை பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் புத்தகங்களை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.தொகுப்பூதியம்தமிழக அரசுப் பள்ளிகளில், தொகுப்பூதியத்தில், 16,549 கலை ஆசிரியர் பணியாற்றுகின்றனர். 

ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உட்பட, பல்வேறு தொழிற்கல்வி கற்பிக்கும் பணியில், இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்த உள்ளது. இத்தேர்வு எப்போது நடக்கும் என, தெரியாது. எனினும், போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மட்டும்,

காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை பிளஸ் 2தேர்வில் புதிய நடைமுறைகள் : வரிசை எண் மாற்றப்பட்டு 2 வித வினாத்தாள்கள்


பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் முக்கிய பாடங்களுக்கு வரிசை எண்கள் மாற்றப்பட்டு ஏ, பி என 2 வித வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பிளஸ்&2 அரசுப் பொதுத்தேர்வுகள் குறித்த முன்னேற்பாட்டு கூட்டம் நடந்தது. சிஇஓ நாகராசு, கூடுதல் சிஇஓ கணேசன், டிஇஓ (பொ) பாலு, மாவட்டதொடக்க கல்வி அதிகாரி எலிசபெத் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசியது:
பிளஸ் 2 தேர்வில் நடப்பாண்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் மாணவர்கள் இணைய தளத்தின் மூலம் தற்காலிக மதிப் பெண் சான்றிதழ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதேபோல் நடப்பாண்டு முதல் தேர்வு மையத்தில் மாணவர்கள் ஏ&பி முறையில் அடுத்தடுத்து உட்கார வைக்கப்படுவார்கள்.

பிளஸ் 2 தேர்வு அறைகளில் நாற்காலி கிடையாது! :ஆசிரியர்கள் 3 மணி நேரம் நிற்க உத்தரவு


'பிளஸ் 2 பொதுத் தேர்வில், கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு நடக்கும், மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்; தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது' என, தேர்வுத் துறை இயக்குனரகம் அதிரடிஉத்தரவிட்டு உள்ளது.5ம் தேதி:பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 5ம் தேதி துவங்குகிறது.

காலை, 10:00 மணிக்குத் தேர்வு துவங்கி, பிற்பகல், 1:15 மணிக்கு முடிகிறது.
*முதல், 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்கலாம்.
*அடுத்த, ஐந்து நிமிடங்கள் மாணவர் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கலாம்.

ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு "தனிச் சட்டம்" தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்



தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

அறிவிக்கை நாள் : 1.03.2015

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.

மேலும் விவரங்களுக்கு :
www.tnpsc.gov.in
 இணைய தளத்தைப் பார்க்கவும். www. tnpsc.gov.in

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உண்ணாவிரதம்