பெற்றோர்-ஆசிரியர் கழகம் லாக்கினில், அனைத்து பள்ளிகளிலும் உள்ள பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் விவரங்கள், செயல்பாடுகளை தெரிந்துகொள்ளமுடியும்
பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுடைய விவரங்களும், இதுவரை பள்ளிகளுக்கு அவர்கள் செய்த உதவிகள் குறித்தும் இந்த செயலியில் இடம்பெற செய்யப்பட இருக்கிறது. (கல்விச்செய்தி) மேலும் நன்கொடையாளர்கள் பள்ளிக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால், அந்த பள்ளியை தொடர்பு கொள்ளும் வகையில் தலைமை ஆசிரியரின் செல்போன் எண், பள்ளி இருக்கும் பகுதிகளை காட்டும் ‘மேப்' ஆகியவையும் உட்புகுத்தப்பட்டு உள்ளன. (துளிர்கல்வி) இதுதவிர முன்னாள் மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு, தாங்கள் படித்த பள்ளியின் விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். மொத்தத்தில் நவீன அம்சங்களுடன், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், மாணவர்களின் நலனை பெற்றோர் அறிந்துகொள்ளவும், ஆசிரியர்களின் வேலைகளை எளிதாக்கவும் இந்த செயலி மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் முதல்-அமைச்சர் ஒப்புதல் பெறப்பட்டு, அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும், இந்த செயலி கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்