பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்
ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை
ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின்
கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல்
தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு இடையூறாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசு இதுவரை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ
நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது
குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.