வங்கிக் கணக்கு ஆரம்பித்து 6 மாதங்களுக்குள் ஆதார் எண்ணை இணைத்தால் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை வங்கி
கணக்குடன் இணைப்பதற்கு டிசம்பர் 31ஆம் தேதி என்று முதலில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 31 வரையில் காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் வங்கிக்கணக்கு தொடங்கியதில் இருந்து 6 மாதத்திற்குள்ளாகவோ அல்லது மார்ச் 31ம் தேதிக்குள்ளாகவோ, இதில் எது அதிககால அவகாசமோ அதற்குள் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.