விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லில் உள்ள எஸ்.ஆர்.அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த 30ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுககு சமூக அறிவியல் 'பாட திருப்புதல் தேர்வு' நடைபெற்றது. தேர்வின்போது 10ம் வகுப்பு 'ஏ' பிரிவைச் சேர்ந்த மாணவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கருகே அமர்ந்து இருந்த மற்றொரு மாணவரின் தேர்வுத்தாளை வாங்கி 'காப்பி' அடித்துள்ளார்.
அப்போது கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர் ஜெயராஜ், இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர் விவேகானந்தனிடம் கூறியுள்ளார். உடற்கல்வி ஆசிரியர் கண்ணனை அழைத்து கம்பால் அடித்துள்ளார். உடனே கண்ணன் உடற்கல்வி ஆசிரியர் விவேகானந்தனின் சட்டையை பிடித்து இழுத்து மோதலில் ஈடுபட்டதால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அங்கு திரண்டனர். இதனால், மாணவர் கண்ணன் தப்பியோடினார். இச்சம்பவம் குறித்து பள்ளி உதவி தலைமை ஆசிரியர் விருதுநகர் கல்வி மாவட்ட அலுவலர் ராமச்சந்திரனிடம் புகார் தெரிவித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மாணவர் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினார். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்குமாறு கல்வி அலுவலர் கூற,மாணவரும் ஆசிரியரிடம் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பெற்றோர் - ஆசிரியர் சங்க கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஆசிரியர் - மாணவர் மோதல் சம்பவத்தில் சுமூக உடன்பாடு ஏற்படும் வரை மாணவரை பள்ளியில் அனுமதிக்க வேண்டாம் என கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். விருதுநகர் கல்வி மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் கூறுகையில், ''மாணவர் - ஆசிரியர் மோதல் சமபவத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே, இன்று (பிப். 5) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பெற்றோர் - ஆசிரியர் சங்க கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை மாணவரை பள்ளிககுள் அனுமதிககவேண்டாம் என தலைமை ஆசிரியரிடம் தெரிவிககப்பட்டுள்ளது,'' என்றார்.