Breaking News

கட்டாய கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு: பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட உத்தரவு


கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


நடப்பு கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உத்தரவில் கூறியிருப்பதாவது: நடுநிலைப் பள்ளிகளுக்கு 2,250 ரூபாய், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2,450 ரூபாய், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.


குரூப் - 2 தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், குரூப் - 2 பதவிக்கான, மெயின் தேர்வு நடந்தது.


துணை வணிக வரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, தொழிலாளர் ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1,130 பதவிகளுக்கு, மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

இதில், 5,635 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களின், தேர்வு எண்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும் 26ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.

இதற்காக, ஒவ்வொரு தேர்வருக்கும், தேதி மற்றும் நேரம் குறித்து, தனித்தனியாக டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருந்து கடிதம் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வருமானவரித் துறை கெடு


வரும் 31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை, இம்மாத இறுதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, வருமானவரித் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப் பாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், வருமானவரிக் கணக்கு அறிக்கை தாக்கல் செய்யஉத்தரவிடப்பட்டது. ஆனால், தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தங்கள் வருமானவரிக் கணக்கை, இன்னும்பள்ளிக்கல்வித் துறை மற்றும் வருமானவரித் துறையில் தாக்கல் செய்யவில்லை.

பிளஸ் 2 ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 36 பேர் பிடிபட்டனர்

பிளஸ் 2 ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 36 பேர் பிடிபட்டனர். இதில், பள்ளி மாணவர்கள், 12 பேர். அதேநேரம், ஆங்கிலம் முதல் தாள் ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிமையாகவும், தமிழ் வழி மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமாகவும் இருந்தது.


பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று, ஆங்கிலம் முதல் தாளுக்கு தேர்வு நடந்தது. ஏழு பக்கங்கள் அடங்கிய வினாத்தாளில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 'ஆப்ஷனல்' வினா உட்பட மொத்தம், 69 கேள்விகள் இருந்தன. முதல் தாளில், பெரும்பாலானவை ஆங்கில இலக்கணம் தொடர்பான கேள்விகள். நூறு வார்த்தைகளுக்கு, ஒரு பத்தி எழுதும் திறன் குறித்த வினாவில், 'சத்தியாகிரகப் போராட்டத்தில் பெண்களை காந்திஜி எந்த அளவுக்கு ஈடுபடுத்தினார்?' என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது.
வினாத்தாள் குறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது:ஆங்கிலக் கவிதை குறித்த வினா, இலக்கணம் தொடர்பான வினாக்கள், தமிழ் வழி மாணவ, மாணவியருக்கு கடினமாக இருந்தன; ஆங்கில வழி மாணவ, மாணவியருக்கு எளிதாக இருந்தன. மொழி மாற்றம் குறித்த வினா, அனைவருக்கும் எளிமையாக இருந்தது. இவ்வாறு கூறினர். நேற்று, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 36 தேர்வர்கள் சிக்கினர். அதில், 12 பேர் பள்ளி மாணவர்கள்; மற்றவர்கள் தனித்தேர்வர்கள்

பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் பிளஸ் 2 தேர்வும் முடியும் வரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை என கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து கோயிலில் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள், கிராம மக்கள்சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் கொத்தமங்கலத்தில் பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு முடியும் வரை கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை எனகிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால் தற்போது தினமும் கோயிலில் சிறப்பு வழிபாடு மட்டுமே நடைபெறுகிறது.கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கிராமத்தினரின் இத்தகைய முடிவால் மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கிராமத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் சார்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள திருத்த ஆணை

கடலூர்:15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் ஆசிரியர்கள் பேரணி:

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரணி
தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். அகவிலைப்படி 100 சதவீத அளவை கடந்து விட்டதால் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் (ஜேக்டோ) அறிவித்து இருந்தனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள்-64


பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதற்காக தமிழகம் முழுவதும் 64 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடத் தேர்வுகள் நடக்கிறது. ஆங்கிலப் பாடத் தேர்வுகள் இன்றும் நாளையும் நடக்கிறது. இதையடுத்து 16ம் தேதி முதல் மொழிப்பாடத் தேர்வு விடைத்தாள்களை திருத்த தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 64 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
24000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 16ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் மொழிப்பாட விடைத்தாள்களை திருத்துவார்கள். அதற்கு பிறகு மொழிப்பாட ஆசிரியர்கள் திருத்துவார்கள். சென்னையில் 4 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவியர் ஆடைகளை தொட்டு சோதனை கூடாது; தேர்வு பணி ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடு.


உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி. வழக்குகள் மார்ச் 30க்கு ஒத்திவைப்பு

CAUSELIST FOR  30th March 2015

Court No. 7 HON'BLE MR. JUSTICE FAKKIR MOHAMED IBRAHIM KALIFULLA HON'BLE MR. JUSTICE SHIVA KIRTI SINGH.

கல்வித்துறை திட்டம்-கிராமப்புற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கை: .


வரும் கல்வியாண்டில், கிராமப்புற அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: 
பள்ளிகளின் சிறப்புகளை முதன்மைப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவைதவிர, இடைநிலை வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பள்ளியின் மீதான விருப்பத்தை அதிகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு, வரும் கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.தங்களின் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை ஆசிரியர்கள் முக்கியப்பணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.கிராமப்புற பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உத்தரவு வழங்கவும்திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்



ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக விவேக்ரே, ரத்தின்ராய், செயலாளராக மீனாஅகர்வால் நியமிக்கப்பட்டனர்.

ஜாக்டோ -ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று( 8.3.15) மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடைபெற்றது.ஆசிரியர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்



ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்: வாசன் அறிக்கை


த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 வருடமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6–வது ஊதியக்குழுவில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம் ரூ.4,200ம், படி நிர்ணயம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.

அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாம்


அரசாணை நிலை எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை
6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.

அரசுத் துறை தேர்வு முடிவை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.,


TO VIEW DEPTL. DEC 2014 RESULTS CLICK HERE...


கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அரசுத் துறை தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டு டிசம்பரில், அரசுத் துறை பணியாளர்களின் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான துறைத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவு நேற்று, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, கல்வித்துறை உதவி ஆய்வாளர், மதிப்பீட்டு மற்றும் ஆய்வு, அறநிலையத் துறை, பஞ்சாயத்து மேம்பாடு மற்றும் வருவாய் ஆகிய துறைகளுக்கான, தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கட்டாய விடுப்பு


பொள்ளாச்சி அருகே தெற்கு ஒன்றியம் பொன்னேகவுண்டனூர் பகுதி மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 21 மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர் பள்ளியான இங்கு தலைமையாசிரியராக உள்ள ஜெயலட்சுமி மீது புகார் கூறி, பெற்றோர் மற்றும் மாணவர்கள் நேற்றுமுன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் சமசரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

’தலைமையாசிரியர் ஜெயலட்சுமி மாணவர்களை தரக்குறைவாக பேசுவதுடன், அடித்தும் உள்ளார். மேலும், மாணவர்களை அவ்வப்போது பள்ளிப்பணிகளை செய்ய வற்புறுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, இவரை மாற்றம் செய்ய வேண்டும்,’ என பெற்றோர் தெரிவித்தனர். இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

பொம்மலாட்ட பாடம் ,ஆசிரியராக மாணவர்கள் - கற்பித்தலில் புதுமையை புகுத்தும் அரசுப் பள்ளி

வகுப்பறையை மாணவர்கள் நேசிக்கும் இடமாக மாற்றினால், கல்வியில் அவர்கள் கரைந்து விடுவார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலையுடன் கல்வியை மாணவர்கள் மூலம் போதித்து அசத்தி வருகின்றனர்.

இப்பள்ளி சென்னை மாகாண சமுதாய நலத்திட்ட இயக்குநரால் கடந்த 1955-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். தனது நீண்ட பாரம்பரியத்தில் பல ஆசிரியர்களை கண்ட இப்பள்ளி தற்போது புதுப்பொலிவுடனும், கல்வி மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும் வகையான கற்றல் முறையை பின்பற்றி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் இப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் சு. விஜயராகவன்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில் பகிர செய்கீரிர்களா?


அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில் பகிர செய்கீரிர்களா? அப்படி எனில் ஆசிரியர் நண்பர்களே உஷார்...
முகநுாலில் பள்ளிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும், மற்ற புகைப்படங்களையும் அப்லோட் செய்வதற்கு கல்வி துறை தடை செய்ய உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பிரிவு உபசார விழாவினை பள்ளியில் கொண்டாடியுள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மார்பிங் செய்து அம்மாணவிகள் மினி பீர் அடிப்பது போன்று புகைப்படங்களை உருவாக்கி அதனை முகநுாலில் சில ஆசிரியர்கள் பரவ விட்டுள்ளனர்

இதனை கல்விதுறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் ஓர் பள்ளியில் மூன்று வருடமாக ஒரே ஆசிரியர் பணியில்...


கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது
v.நாங்கூர் என்னும் கிராமம்.இந்த குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமையாசிரியர் ஒருவர் தான் பணியில் உள்ளார்.அங்கு பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறுதலில் சென்றுவிட்டதால் அந்த பணியிடம் காலியாக உள்ளது.சுமார் 35 மாணவர்கள் அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.அலுவலக­ வேலை நிமித்தம் தலைமையாசிரியர் வெளியில் செல்லும்போது அருகில் உள்ள பள்ளியில் இருந்து மாற்றுப்பணிக்கு ஆசிரியர் அனுப்பிவைக்கப்படுகின­்றார்.தலைமையாசிரியர் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக நிரந்தர மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தி பலமுறை உதவிதொடக்க கல்வி அலுவலரிடம் மனுகொடுத்தும் இதுவரை மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.இ­தனால் மாணவர்களின் கல்வித்திறன் குறைகிறது.இந்தப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வி.நாங்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிப்பள்ளி­க்கு மாற்றுப்பணி ஆசிரியரை விரைந்து நியமிக்கவேண்டும் என்று ஊர்பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாணவர்களின் ஆதார் எண் சேகரிப்பு: முறைகேடுகளை தடுக்க புது திட்டம்


கல்வி உதவித்தொகை, சீருடை, லேப் - டாப் போன்ற அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின், ஆதார் எண்ணை சேகரிக்கும் பணியை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது.

மத்திய, மாநில அரசு கள் மூலம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மாணவர்களின் மொத்த எண்ணிக்கையும், நலத்திட்டங்கள் பெறுபவர்களின் எண்ணிக்கையும், பல நேரங்களில் முரண்படுகின்றன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வந்தபின், எட்டாம் வகுப்பு வரை, மாணவர் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், வேறு பள்ளி களில் சேரும் நிலை உள்ளது. இதனால், கிராமப்புறப் பள்ளி மாணவர்களில் பலர், வேறு ஊருக்கு குடும்பத்துடன் செல்லும் போது, அவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்காமல், வேறு பள்ளியில் சேர்ந்து விடுகின்றனர். முந்தைய பள்ளியில், அந்த மாணவரின் பெயர் நீக்கப்படாமல், 'ஆப்சென்ட்' அல்லது இடைநிற்றலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், அரசின் திட்டங்களைத் திட்டமிடுவதில், பள்ளிக்கல்வித் துறைக்கு பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இதை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களின் ஆதார் எண்களை, பள்ளி யின் பதிவேடுகளில் இணைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன், 'கல்வி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில், மாணவர் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, ஊர், தாலுகா, மாவட்டம், தொடக்கக் கல்வி அல்லது ஏற்கனவே படித்த பள்ளி, தற்போது படிக்கும் பள்ளி, வகுப்பு ஆகிய விவரங்களுடன், மாணவனின் ஆதார் எண்ணும் இணைத்து, கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மாணவர் பெயர் இருப்பதை, தனி மென்பொருள் மூலம் கண்டுபிடித்து நீக்கி விட முடியும்.

மாணவர் நலத்திட்டங்கள் என்ன?

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை


ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சவுதாலா, மகன் அஜய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா முதல்வராக இருந்தபோது ஆசிரியர் பணிநியமனத்தில் சவுதாலா ஊழல் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஓம்பிரகாஷ் சவுதாலா உள்பட 53 பேருக்கு கீழ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. சவுதாலாவின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

குரூப் - 2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்


டி.என்.பி.எஸ்.சி., நடத்திய மாவட்ட சிவில் நீதிபதி பணியில், 162 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, நவம்பரில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற, 590 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சரிபார்ப்புப் பணி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று காலை துவங்கியது.


முதல் இரண்டு நாட்கள், தலா, 55 பேரிடமும், 6ம் தேதி முதல், தினமும் தலா, 120 பேரிடமும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மார்ச் 11ல், பணிகள் முடியும்; பின், நேர்முகத் தேர்வு நடக்கும். டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது, அவர் கூறும் போது, ''குரூப் - 2 தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது; மாவட்டக் கல்வி அலுவலர் பணித் தேர்வு முடிவுகளும், விரைவில் வெளியாகும்; குரூப் - 1 தேர்வு, மே மாதம் அறிவிக்கப்படலாம்; மற்ற புதிய தேர்வுகள், ஆண்டு திட்டப்படி அறிவிக்கப்படும்,'' என்றார். இதற்கிடையில், மோட்டார் வாகன ஆய்வாளருக்கான, 17 பணியிடங்களுக்கு தேர்வான, 42 பேருக்கு, நேற்று டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு, இன்று நேர்முகத் தேர்வு நடக்கிறது.

11 ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை 2015