Breaking News

சாதனை- சிலம்பம் சுற்றிக்கொண்டே திருவள்ளுவர் படம் வரைந்தும் திருக்குறளை சொல்லியும் பள்ளி மாணவி சாதனை

 


சிதம்பரம் அருகே தா.சோ பேட்டை பள்ளியில் படிக்கும் மாணவி சிலம்பம் சுற்றிக்கொண்டே திருவள்ளுவர் படத்தை வரைந்தும் திருக்குறள் சொல்லியும் சாதனை.

சிதம்பரம் அருகே தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவி ஆதிஸ்ரீ. இவர் சிலம்பம் சுற்றிக் கொண்டே திருக்குறள் சொல்லியும் திருவள்ளுவர் படத்தையும் வரைந்தும்  சாதனை சாதனை படைதார்.

இந்நிகழ்வு தா.சோ.பேட்டை பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு அசோக் அவர்கள் சாதனை மாணவியை பாராட்டி சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். 

சாதனை படைத்த மாணவி ஆதிஸ்ரீயை  ஆசிரியர்களும் பெற்றோர்களும் வெகுவாக பாராட்டினர்